நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வேலை கிடைக்காத விரக்தியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் - காப்பாற்றிய டிரைவர்!

 மத்தியப்பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எந்த இடத்தில் நடந்தது என்ற விவரம் தெரியவில்லை. சமயோசித்தமாக செயல்பட்டு இளம் பெண்ணைக் காப்பாற்றிய ஆட்டோ டிரைவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

வேலை கிடைக்காத விரக்தியில் ரயில் முன் நின்று தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இணையத்தில் பரவிய அந்த வீடியோவில், ரயில்வே கிராஸிங்கில் இளம் பெண் ஒருவர் துப்பட்டாவால் முகத்தை மறைத்தவாறு நின்று கொண்டிருக்கிறார். ரயில் வரும் நேரம் என்பதால், கிராஸிங்கின் இருபுறமும் தடுப்பு போடப்பட்டு ரயில் செல்வதற்காக வாகனங்கள் சாலையில் காத்திருக்கின்றன. அந்த இளம் பெண் நின்று கொண்டிருக்கும் பகுதியிலும் ஆட்டோ மற்றும் இதர வாகனங்கள் நின்று கொண்டிருக்கின்றன. ரயில் வரும் சத்தம் கேட்டவுடன், சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த அந்தப் பெண், திடீரென அந்த தடுப்புக்குள் புகுந்து ரயில் வரும் தண்டவாளத்தில் சென்று நின்று கொண்டார்.

அப்போது, அங்கு ஆட்டோவில் காத்திருந்த டிரைவர், அந்தப் பெண் தற்கொலைக்கு முயல்கிறார் என அறிந்து கொண்டு, வேகமாக தடுப்பைச் தாண்டிச் சென்று இளம்பெண்ணை கைப்பிடித்து இழுந்து வந்தார். அவர் அந்தப் பெண்ணை இழுத்து வந்த நொடிப்பொழுதில் ரயில் வேகமாக அந்த இடத்தை கடந்து சென்றது. பின்னர், அங்கிருந்தவர்கள் அனைவரும் கூடி அந்தப் பெண்ணிடம் விசாரிக்கும்போது, வேலைக் கிடைக்கவில்லை எனக் கூறி கதறியழுகிறார். இதனையடுத்து அனைவரும் ஆறுதல் வார்த்தைகள் கூறி தேற்றுகின்றனர்.

மத்தியப்பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எந்த இடத்தில் நடந்தது என்ற விவரம் தெரியவில்லை. சமயோசித்தமாக செயல்பட்டு இளம் பெண்ணைக் காப்பாற்றிய ஆட்டோ டிரைவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். அவர் துரிதமாக செயல்படவில்லை என்றால் ஒரு உயிர் பலபேர் முன்னிலையிலேயே போயிருக்கும் என தெரிவித்துள்ள நெட்டிசன்கள், அவரது நெஞ்சுரத்தை பாராட்டியாக வேண்டும் என கூறியுள்ளனர்.


சிலர், எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை அந்தப் பெண் புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். வாழ்க்கையில் வரும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் எனவும், அந்தப் பெண்ணுக்கு முறையான கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதேபோல் ஒரு சம்பவம் விஜயவாடாவில் நடைபெற்றது. குண்டூர் கிருஷ்ணா ரயில் நிலையத்தில் ரயில் வரும்போது தற்கொலை செய்து கொள்வதற்காக இளைஞர் ஒருவர் தண்டவாளத்திற்கு சென்றுள்ளார். இதைப் பார்த்த ரயில் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்த முயற்சி செய்தார். இருப்பினும், ரயில் அந்த இளைஞர் மீது மோதி கால்கள் துண்டானது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு வேலை இழந்த ஆயிரக்கணக்கானோர், மாற்று வேலை கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். இதனால், பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, கடும் மன உளைச்சலை எதிர்கொண்டு வருவதால், தற்கொலையை தங்களின் கடைசி ஆயுதமாக நினைத்து முயற்சி செய்வது அதிகரித்துள்ளது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்