நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மாயமும் இல்லை மந்திரமும் இல்லை ... மர்ம கிணற்றின் ரகசியம் உடைந்தது

 சூரிய ஒளி கூட கிணற்றின் சில அடிகள் வரை மட்டுமே தொடுகிறது என்பதால் இருளாகவே தோன்றும் இந்த கிணற்றுக்குள் என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே இருந்த நிலையில் தற்போது ஆராய்ச்சியில் வெட்டவெளிச்சமாகி உள்ளது.

ஏமனில் உள்ள நரகத்தின் கிணறு என்றழைக்கப்படும் இயற்கையான கிணறு விலகாத மர்மங்களை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. ஏமன் - ஓமன் எல்லையில் மஹ்ரா பாலைவனப்பகுதியில் இந்த மர்ம கிணறு அமைந்துள்ளது. 90 அடி அகலம் கொண்ட இந்த கிணறு 300 முதல் 750 அடி ஆழம் கொண்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதன் அருகில் செல்லும் பொருட்கள் உள்ளே இழுத்துக் கொள்ளப்படும் என்றும், இது பேய்களை அடைத்து வைக்கும் சிறை என்றும் உள்ளூர் கதைகள் சொல்லப்படுகின்றன. ஆனால் அதனுள் என்ன இருக்கிறது என்பது தங்களுக்குத் தெரியாது என ஏமன் அதிகாரிகள் இதுவரை கூறி வந்தனர்.

சூரிய ஒளி கூட கிணற்றின் சில அடிகள் வரை மட்டுமே தொடுகிறது என்பதால் இருளாகவே தோன்றும் இந்த கிணற்றுக்குள் என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே இருந்து வந்தது .
இதனை நரகத்தின் கிணறு எனவும் அதற்கான வழி எனவும் கட்டுக்கதைகள் சொல்லப்பட்டு வந்த நிலையில் ஓமன் நாட்டின் குகை பயணக் குழுவைச் சேர்ந்த 10 ஆய்வாளர்கள் குழு, இந்த மர்ம குழி பற்றி ஆய்வு செய்ய முடிவு செய்தது. ஆய்வு குழுவினர் குழியில் உரிய உபகரணங்களுடன் எவ்வித தயக்கமுமின்றி தைரியமாக‌ கிணற்றின் உள்ளே இறங்கினர்.

இந்த கிணறு கடுமையான துர்நாற்றத்தையும் வீசியுள்ளது. கிணற்றின் உள்ளே ஆய்வாளர்கள் பயணிக்க நீண்ட குகை போன்று கிணறு நீண்டு கொண்டே சென்றுள்ளது. அதோடு உள்ளே அழகிய‌ நீர் வீழ்ச்சியும் இருந்துள்ளது.

அதுமட்டுமல்லாது, அங்கு ஏராளமான பாம்புகள், இறந்த விலங்குகள், குகை முத்துக்களும் இருந்துள்ளன. இவை ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. விரைவில் இது குறித்த இறுதி ஆய்வுகள் வெளிவரும்,' என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

நரகத்துக்கான வழி , பூதகிணறு , உள்ளிழுக்கும் கிணறு என பல மூடநம்பிக்கைகள் ஆய்வாளர்களால் தகர்க்கப்பட்டுள்ளது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!