நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மர்மக்குழிக்குள் அழகிய நீர்வீழ்ச்சி! திகைக்கும் ஆய்வாளர்கள்!

 'பர்ஹட்டின் கிணறு' என்று அழைக்கப்படும் மர்மக் குழி, 367 அடி ஆழமும், 30 மீட்டர் விட்டமும் கொண்டது.


துபாய்

 ஓமான் அல்லது ஒமான் சுல்தானகம் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபியத் தீபகற்பத்தின் தென்கிழக்குக் கரையில் அமைந்து உள்ளது.

ஓமன் நாட்டில் உள்ள அல் மாரா பாலைவனத்தின் நடுவில் அமைந்துள்ளது 'பர்ஹட்டின் கிணறு' என்று அழைக்கப்படும் மர்மக் குழி, 367 அடி ஆழமும், 30 மீட்டர் விட்டமும் கொண்டது.  மேலும், விசித்திரமான வட்டமான‌ நுழை வாயிலையும் கொண்டுள்ளது. வானிலிருந்து பார்த்தால் சிறிய துளை போன்று காணப்படும்.


இதனை 'நரகத்தின் கிணறு' என்றும், இதில் பூதம் இருப்பதாகவும் உள்ளூர் மக்களிடையே கருத்து இருந்து வந்தது. மேலும், இது கடுமையான துர்நாற்றத்தையும் வீசி வந்தது.  இதனால், ஓமன் நாட்டின் குகை பயணக் குழுவைச் சேர்ந்த 10 ஆய்வாளர்கள் குழு, இந்த மர்ம குழி பற்றி ஆய்வு செய்ய முடிவு செய்தது. ஆய்வு குழுவினர் குழியில் உரிய உபகரணங்களுடன் எவ்வித தயக்கமுமின்றி தைரியமாக‌ இறங்கினர்.

அந்த மர்மக்குழியின் உள்ளே நீண்ட குகை போன்று காணப்பட்டது, அதோடு உள்ளே சினிமா காட்சிகளில் காட்டப்படுவது போன்று அழகிய‌ நீர் வீழ்ச்சியும் தென்பட்டது.  அதுமட்டுமல்லாது,அங்கு ஏராளமான பாம்புகள், இறந்த விலங்குகள், குகை முத்துக்களும் இருந்தன. இவை அங்கு சென்ற ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

நீண்ட காலமாக நிலவி வரும் மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 'இந்த மர்ம குழியில் எந்த பூதமும் இல்லை. ஏமனின் வரலாறு குறித்த புதிய ஆய்வுகளுக்கான இடமாக இது திகழும்.  லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த மர்மக்குழி உருவாகி இருக்கலாம். தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் இது குறித்த இறுதி ஆய்வுகள் வெளிவரும்,' என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


ALSO READ : மைக்கேல் ஜாக்சன் மரணமும்! நீடிக்கும் மர்மமும்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்