நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டி வில்லியர்ஸ் அவுட்டானதும் விரக்தியான மகன்; க்யூட் வீடியோ

 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

ஐபிஎல் 2021 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் அணிகள் துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 

முதலில் ஆடிய பெங்களூரு (RCB) அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அந்த அணியின் தொடக்க வீரரான தேவ்தத் படிக்கல், 2வது ஓவரிலேயே பும்ரா பந்து வீச்சில் டக் அவுட் ஆனார். இருப்பினும், அதன் பின்னர் பாட்னர்ஷிப் அமைத்த விராட் கோலியும் கீப்பர் ஸ்ரீகர் பரத்தும் அற்புதமாக விளையாடினர்.

இருவருக்கும் இடையே சூப்பரான பாட்னர்ஷிப் உருவாகி வந்ந போது தான், ஸ்ரீகர் பரத் 32 ரன்களில் ராகுல் சாகர் ஓவரில் வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய மெக்ஸ்வெல் நன்கு தனது ஆட்டத்தை விளையாடி பெங்களூரு அணியின் ஸ்கோரை சீராக உயர்ந்தினார். மறுமுனையில் அரைசதம் அடித்திருந்த கோலி  52 ரன்களில் மில்னே பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து ஏபி டி வில்லியர்ஸ் களத்தில் இறங்கினார்.

மெக்ஸ்வெலுடன் ஏபி டி வில்லியர்ஸும் இணைந்ததால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர தொடங்கியது. 18 வது ஓவரில் பும்ரா வீசிய 3 வது பந்தில் செட் ஆகி இருந்த பேட்ஸ்மென் மெக்ஸ்வெல் 56 ரன்களில் வெளியேறினார். அதற்கு அடுத்த பந்திலேயே ஏபி டி வில்லியர்ஸ் ஆட்டமிழந்தார். சிக்சர் அடிக்க ஏபி டி முயல போது அவர் அவுட் ஆனார். அடுத்து அடுத்து 2 அதிரடி வீரர்கள் வெளியேறியதால் ஆர்சிபி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டி வில்லியர்ஸ் அவுட்டானதும் கேமரா அவரது குடும்பத்தினர் பக்கம் திரும்பியது. தனது தந்தை அவுட்டான விரக்தியான் நிலையில் அங்கு இருந்த நாற்காலியில் ஓங்கி ஒரு அடி விட்டார் அவரது மகன். ஆனால் அது வலிக்கவே அடுத்த நொடி ஏன் இதை செஞ்சோம் என அவரது முகம் மாறுகிறது. அவரது இந்த செயலைக் கண்டு டி வில்லியர்ஸின் மனைவி டேனியல் சற்று பதறிவிட்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 



also read : பள்ளியில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஆசிரியர்கள் - வீடியோ வைரலானதால் பணியிடை நீக்கம்


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்