நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பிரதமர் மோடியிடம் அமெரிக்கா ஒப்படைத்த 157 கலைப்பொருட்கள்!

 பிரதமர் மோடி நாடு திரும்பும்போது அவரிடம் இந்தியாவைச் சேர்ந்த 157 பழங்கால கலைப் பொருள்களை அமெரிக்கா ஒப்படைத்தது.

வாஷிங்டன், 

‘குவாட்’ உச்சிமாநாடு, ஐ.நா. பொதுச் சபை கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு 3 நாள் பயணமாகச் சென்ற பிரதமா் நரேந்திர மோடி நேற்று அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டாா். 

முன்னதாக பிரதமா் மோடி தனது டுவிட்டரில், இந்தியா-அமெரிக்கா உறவு வரும் ஆண்டுகளில் இன்னும் வலுவாக வளா்ச்சியடையும் என்று நம்புகிறேன். எங்களது மக்களிடையேயான தொடா்பு எங்களது வலிமையான சொத்துகளில் ஒன்று என்று அவர் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் பிரதமரின் பயணத்தின்போது இந்தியாவைச் சோ்ந்த 157 பழங்கால கலைப் பொருள்களை அமெரிக்கா அவரிடம் வழங்கி உள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கலாசார பொருள்களின் திருட்டு, சட்டவிரோத வா்த்தகம், கடத்தல் ஆகியவற்றை எதிா்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை வலுப்படுத்த ஜனாதிபதி பைடனும், பிரதமா் மோடியும் தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினா். அதன் ஒரு பகுதியாக இந்தக் கலைப் பொருள்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 71 கலாசார பொருள்கள், இந்து மதம் தொடா்பான 60 சிலைகள், பெளத்த மதம் தொடா்பான 16 சிலைகள், சமண மதம் தொடா்பான 9 சிலைகள் அடங்கும். 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஒன்றரை மீட்டா் ரேவந்தா கற்சிலை முதல் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 8.5 செ.மீ. உயரமுள்ள நோ்த்தியான வெண்கல நடராஜா் சிலை வரை இதில் இடம்பெற்றுள்ளன என்று அதில் கூறப்பட்டிருந்தது. 




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்