நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்த ஸ்மார்ட்போன்களில் Youtube, Gmail இயங்காது - கூகுள் தடை பின்னணி என்ன?

 பழைய சாப்ட்வேரான கிங்கர்பிரெட் முதல் ஆன்டிராய்டு 11 வரை உள்ள இயங்குதளத்தின் பல்வேறு பதிப்புகளில் இயங்கி வருவதாக கூறிய கூகுள், ஆன்டிராய்டு 12 இயங்குதளத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தது.

ஆன்டிராய்டு 2.3 உள்ளிட்ட பழைய சாப்ட்வேர்களில் இயங்கும் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களில் யூடியூப், ஜிமெயில் ஆகிய செயலிகளின் சேவைகளை பெற முடியாது என கூகுள் அறிவித்துள்ளது.

டெக் துறையின் அபார வளர்ச்சியின் காரணமாக புது சாப்ட்வேர்களின் இயக்கத்துக்கு ஏற்ப, கூகுள் நிறுவனம் தங்களின் சேவைகளை அப்டேட் செய்து கொண்டே வருகிறது. வைரஸ், தகவல் திருட்டு உள்ளிட்ட அபாயங்கள் இருப்பதால் அதற்கேற்ப அப்டேட் செய்யப்படும் ஆன்டிராய்டு வெர்சன்களில் உள்ள ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கூகுள் நிறுவனம் சேவைகளை வழங்கி வருகிறது.

அந்தவகையில், அந்த நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் கூகுளில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் உள்ளிட்டவை 3 பில்லியனுக்கும் அதிகமானவை செயல்பாட்டில் இருப்பதாக தெரிவித்தது.

இவை அனைத்தும் பழைய சாப்ட்வேரான கிங்கர்பிரெட் முதல் ஆன்டிராய்டு 11 வரை உள்ள இயங்குதளத்தின் பல்வேறு பதிப்புகளில் இயங்கி வருவதாக கூறிய கூகுள், ஆன்டிராய்டு 12 இயங்குதளத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தது.

இதனால், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஆன்டிராய்டு பழைய பதிப்புகளான 2.3 உள்ளிட்ட வெர்சன்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் கூகுள் சேவைகளை பயன்படுத்த தடை விதிப்பதாக அறிவித்தது.

இந்தப் பதிப்பு ஸ்மார்ட்போன்களை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் ஆகிய செயலிகள் செயல்படாது. அதேபோல், ஆன்டிராய்டு 2.3.7 பதிப்புக்கு மேற்பட்ட இயக்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் இந்த செயலிகள் இயங்காது என்றாலும், பிரவுசர் மூலம் உபயோகிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

உங்கள் ஸ்மார்ட்போன், எந்த ஆன்டிராய்டு பதிப்பின் கீழ் இயங்குகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றால், Settings > Advanced > System Update என்ற வழிமுறையைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். மேலும், அங்கே இருக்கும் ஆப்சனை பயன்படுத்தி ஸ்மார்ட்போனை லேட்டஸ்ட் வெர்சனுக்கு அப்டேட் செய்து கொள்ளலாம். யூசர்கள் குறைந்தபட்சம் ஆன்டிராய்டின் 3.0 Honeycomb பதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

கூகுளின் இந்த அப்டேட் குறித்து யூசர்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. ஏனென்றால், கூகுள் தடை விதித்துள்ள கிங்கர்பிரெட் வெர்சன் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், அந்த வெர்சன் ஸ்மார்ட்போன்களை அரிதினும் அரிதாக மட்டுமே யூசர்கள் வைத்திருக்க முடியும். பழைய ஆன்டிராய்டு வெர்சன் ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பவர்கள், கூகுள் செயலிகளுக்குள் யூசர் பெயர், பாஸ்வேர்டு கொடுத்து நுழைந்தாலும் மீண்டும் மீண்டும் அதனையே கேட்டுக் கொண்டிருக்கும். அக்கவுண்டுக்குள் நுழையாது. இந்தப் பிரச்சனையை நீங்கள் எதிர்கொண்டீர்கள் என்றால், நீங்கள் தடை செய்யப்பட்ட ஆன்டிராய்டு வெர்சனை உபயோகப்படுத்துகிறீர்கள் என அறிந்து கொள்ளலாம்.

எந்தெந்த போன்களில் கூகுள் செயலிகள் இயங்காது?

*சோனி ஆஸ்பிரியா அட்வான்ஸ்

*லெனோவா கே 800

*சோனி எக்ஸ்பீரியா கோ

*வோடபோன் ஸ்மார்ட் II

*சாம்சங் கேலக்ஸி s2

*சோனி எக்ஸ்பீரியா பி

*எல்ஜி ஸ்பெக்ட்ரம்

*சோனி எக்ஸ்பீரியா எஸ்

*எல்ஜி பிராடா 3.0

*HTC வேலோசிட்டி

*HTC Evo 4G

*மோட்டோரோலா தீ

*மோட்டோரோலா XT532



ALSO READ : இருளில் மூழ்கியுள்ள சீனா.. தினமும் 9 மணி நேரம் மின்தடை.. அடுத்த ஆண்டு மார்ச் வரை மின்தடை ஏன்?


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்