நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

The Country of Lakes: ஏரிகளின் நாடு பின்லாந்து பற்றிய முக்கிய தகவல் தெரியுமா?

 வடக்கு ஐரோப்பாவின் ஃபென்னோஸ்கேனடியன் பகுதியில் அமைந்துள்ள நாடு பின்லாந்து, உலகின் அழகான நாடுகளில் ஒன்று. 'ஏரிகளின் நிலம்' என்றும் அழைக்கப்படுகிறது.


பின்லாந்து, உலகின் அழகான நாடுகளில் ஒன்று.  வடக்கு ஐரோப்பாவின் ஃபென்னோஸ்கேனடியன் பகுதியில் அமைந்துள்ள இந்த நாடு 'ஏரிகளின் நிலம்' என்றும் அழைக்கப்படுகிறது.

இதற்குக் காரணம், இங்கு ஒரு லட்சத்து 87 ஆயிரத்துக்கும் அதிகமான ஏரிகள் உள்ளன, நாட்டின் அழகைக் கூட்டுவதே ஏரிகள் தான். ஏரிகளின் நாடு வேறு பல சுவாரஸ்யமான விஷயங்களையும் வைத்திருக்கிறது. 

வடகிழக்கு ஐரோப்பாவில் உள்ள குடியரசு நாடான பின்லாந்தின் தென்மேற்கில் பால்டிக் கடல் அமைந்துள்ளது. ரஷ்யா, சுவீடன், நார்வே,  போன்ற நாடுகள் புடைசூழ அமைந்திருக்கிறது பின்லாந்து.  இந்நாட்டின் தலைநகர் ஹெல்சின்கி ஆகும்.

இந்த நாடு அதன் வானிலை மற்றும் வாழ்க்கை முறைக்கு உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது. பின்லாந்தின் வானிலை மிகவும் ரம்மியமானது, மனம் குளிர வைப்பது. கோடைகாலத்தில், இரவு 10 மணிக்கும் கூட மாலை நேரம் போல வெளிச்சம் இருக்கும். ஆனால், குளிர்காலத்தில் பகலிலும் இருள் கவிந்து காணப்படும். மதிய நேரத்தில்தான் சூரியனின் வெளிச்சம் சிறிந்து நேரம் பின்லாந்தை தரிசிக்கும்.

பின்லாந்தில் 'டோர்னியோ' ('Torneo')என்று அழைக்கப்படும் மிகவும் தனித்துவமான கோல்ஃப் மைதானம் உள்ளது, அதில் பாதி பின்லாந்திலும் பாதி ஸ்வீடனிலும் உள்ளது. இந்த கோல்ஃப் மைதானத்தில் மொத்தம் 18 துளைகள் உள்ளன, அவற்றில் ஒன்பது பின்லாந்திலும், மீதமுள்ள ஒன்பது சுவீடனிலும் உள்ளன. இங்கே மக்கள் பெரும்பாலும் விளையாடும்போது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்கிறார்கள்.

பின்லாந்து மற்றுமொரு வித்தியாசமான விஷயத்திற்கு பிரபலமானது. கணவன், தனது மனைவியின் முதுகில் தூக்கிக் கொண்டு ஓடும் போட்டி பின்லாந்தில் பிரபலமானது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அவரது மனைவியின் எடைக்கு சமமான பீர் பரிசாக வழங்கப்படுகிறது. இதுபோன்ற போட்டி அநேகமாக உலகில் வேறு எங்கும் இருக்காது.  

பின்லாந்தின் ஒரு சட்டம் மிகவும் சுவாரஸ்யமானது. இங்கு போக்குவரத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் விதம் வித்தியாசமானது. விதிகளை மீறுபவர்களின் சம்பளத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். 

மொபைல் தயாரிப்பாளரான நோக்கியா (Nokia) மற்றும் ரெவியோ (Revio) நிறுவனங்கள் பின்லாந்து நாட்டைச் சேர்ந்தவை.



ALSO READ : Alcatraz Prison: உலகின் பயங்கரமான, மர்மமான சிறைச்சாலை

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்