உயிரை காவு வாங்கும் போன் நம்பர்! நீடிக்கும் மர்மம்!
- Get link
- X
- Other Apps
ஒரு குறிப்பிட்ட போன் நம்பர் வைத்திருந்தால் அந்த நபர் உயிரிழந்து விடுவார் என்ற மர்மம் இருக்கிறது.
பல்கேரியா : நாம் வாழும் இந்த உலகம் மர்மங்கள் நிறைந்ததா? இல்லை இந்த உலகமே ஒரு மர்மமானதா? என்ற கேள்விக்கு சரியான விடையை நம்மில் யாராலும் அவ்வளவு எளிதில் சொல்ல முடியாது. அந்தளவிற்கு உலகமும் மர்மங்களும் ஒன்றிணைந்தே உள்ளன. இப்படிபட்ட மர்மங்களுள் 13 என்ற நம்பரும் மர்மம் என்பதற்கான உதாரணம். பல கட்டிடங்கள் அல்லது ஓட்டல்களில் 13-வது எண் கொண்ட ரூம் கூட இருக்காது. அந்த அளவிற்கு 13-வது எண் என்பது ஒரு பேய் வீடு என்ற மனநிலை உலகம் முழுவதும் இன்றுவரை இருந்து வருகிறது.அதேபோல ஒரு குறிப்பிட்ட போன் நம்பர் வைத்திருந்தால் அந்த நபர் உயிரிழந்து விடுவார் என்ற மர்மம் இருக்கிறது.அதெல்லாம் கட்டுக்கதை என்று கூட பலர் நினைக்கலாம், ஆனால் இன்றளவும் அந்த போன் நம்பர் மீதுள்ள பயம் என்பது பல்கேரியா நாட்டு மக்களிடையே நீடித்து வருகிறது. 0888 888 888 என்ற இந்த போன் நம்பரில் தான் அந்த மர்மம் அடங்கியிருக்கிறது. அந்த போன் நம்பர் வைத்திருந்தவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள். அதனால் இனி அந்த நம்பரை யாருக்கும் வழங்க வேண்டாம் என பல்கேரியா நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த போன் நம்பர் 3 நபர்களை காவு வாங்கியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?ஆம்,நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அதுதான் உண்மை. இந்த போன் நம்பரை முதன் முதலில் அந்நாட்டின் 'Mobitel' எனும் நெட்வோர்க் கம்பெனியின் CEO Vladimir Grashnov என்பவர் வைத்திருந்தார். இது அந்த நிறுவனத்திற்கு சொந்தமான போன் நம்பர். இந்நிலையில், Vladimir Grashnov கேன்சர் நோயால் கடந்த 2001-ம் ஆண்டு காலமானார். இது சாதாரண மரணமாக தெரியும்.
ஆனால் 'மெயில் ஆன்லைன்' என்ற பத்திரிக்கை Vladimir Grashnov-ன் மரணம் கேன்சரால் ஏற்பட்டதுதான் ஆனால் அவருக்கு கேன்சர் வர, அவர் உபயோகித்த அதிகப்படியான ரேடியா ஆக்டிவ் கொண்ட பொருள்தான் காரணம் என்று தெரிவித்திருந்தது. ஆனால் அவர் வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது காரிலோ எங்குமே ரேடியோ ஆக்டிவ் பொருட்கள் இல்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். இந்த வழக்கு மர்மமானதாகவே பார்க்கபடுகிறது. இரண்டாவதாக இந்த எண்ணை அந்நாட்டில் பிரபலமாக இருந்த மாஃபியா டான் ஒருவர் வைத்திருந்தார். அவர் பெயர் Konstantin Dimitrov. அவர் கடந்த 2003-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். சுமார் 500 மில்லியன் யூரோ மதிப்பிலான போதை பொருட்களை கடத்திய இவர், இந்த போன் நம்பரை வாங்கிய சில நாட்களிலேயே உயிரிழந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இவரின் அபரீத வளர்ச்சியை பொறுக்காத காரணத்தினால் ரஷ்யாவை சேர்ந்த மாஃபியா கும்பல் தலைவர் Konstantin Dimitrov கொலை செய்தார் என்றாலும், அவர் சாகும்போது அந்த நம்பர் கொண்ட போன் அவரது பாக்கெட்டில் தான் இருந்துள்ளது. இதனால் Konstantin Dimitrov மரணத்திற்கு அந்த போன் நம்பர் தான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. Konstantin Dimitrov இறந்த பிறகு அந்த எண்ணை அவரது சகோதரர் Konstantin Dishliev என்பவர் வைத்திருந்தார். இவரும் அந்த எண்ணை பயன்படுத்த தொடங்கிய சில நாட்களில் ஒரு இந்திய ரெஸ்டாரென்ட் முன்பு எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 2005-ல் அவர் இருப்பதற்கு முன்பு அந்நாட்டில் அதிகமாக கொக்கைன் வியாபாரம் கள்ள சந்தையில் செய்து வந்துள்ளார். இந்த வழக்கு இன்னும் முடித்து வைக்கப்படவில்லை.
இந்த எண்ணிற்கு பின்னால் ஏதோ மர்மம் இருக்கிறது. அந்த எண்ணை பயன்படுத்துபவர்கள் எல்லாம் உயிரை இழக்கிறார்கள்.யாரும் எதிர்பாராத நேரத்தில் மிக குறுகிய காலத்தில் அவர்கள் உயிரை இழக்கிறார்கள் என்பதை உணர்ந்த 'மோபிடெல்' நிறுவனம் யாருக்கும் ஒதுக்கீடு செய்யாமல் இருப்பதாக முடிவு செய்தது. அதன் பின் அந்த எண்ணை மற்றவர்களுக்கு கொடுக்க 'மொபிடெல்' நிறுவனம் மறுத்துவிட்டது. உண்மையில் இந்த எண்ணில் ஏதேனும் மர்மம் இருக்கிறதா? அல்லது இது எல்லாம் எதர்ச்சியாக நடந்ததா? என்பது மர்மமாகவே உள்ளது.
ALSO READ : இது தான் இந்தியாவின் அழகு - மகாபாரதம் டைட்டில் சாங்கை அற்புதமாக பாடி அசத்தும் முஸ்லிம் பெரியவர்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment