பெண்களின் ஆடைகளை இலவசமாக துவைக்க வேண்டும்! நீதிமன்றத்தின் வித்தியாச தீர்ப்பு!
- Get link
- X
- Other Apps
பீகாரின் மதுபானி மாவட்டத்தில் உள்ள ஜஞ்சர்பூரில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் ஒரு பெண்ணை துன்புறுத்தியதற்காகவும், அநாகரீகமாக நடந்து கொண்டதற்காகவும் குற்றவாளிக்கு வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
பீகார் : பீகாரின் மதுபானி மாவட்டத்தில் உள்ள ஜஞ்சர்பூரில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் ஒரு பெண்ணை துன்புறுத்தியதற்காகவும், அநாகரீகமாக நடந்து கொண்டதற்காகவும் குற்றவாளிக்கு வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது குற்றம் சாட்டப்பட்ட நபர் கிராமத்திலுள்ள பெண்களின் ஆடைகளை துவைக்க வேண்டும் என வினோதமான தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் பீகாரின் மதுபானி மாவட்டத்தை சேர்ந்த லலான் குமார் என்பவர் இரவில் நடந்து சென்ற பெண்ணிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டார். மேலும் பெண்ணின் மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட முயன்றுள்ளார். பின்னர்,இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து ஏப்ரல் 19-ம் தேதி காவல்துறையினர் லலான் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறி லாலன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவினாஷ் குமார், அடுத்த ஆறு மாதங்களுக்கு, குற்றம் சாட்டப்பட்ட லலான் குமார் கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களின் ஆடைகளையும் துவைக்க வேண்டும் என கூறினார். இப்படி செய்தால் தான் அவர் மனதில் பெண்களின் மீது மரியாதை இருக்கும். அது மட்டுமல்லாமல், குற்றம் சாட்டப்பட்டவர் பெண்களின் ஆடைகளைக் துவைத்த பிறகு, துணிகளை இஸ்திரி செய்து திருப்பித் தர வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் என்ன தொழில் செய்கிறார் என்று நீதிபதி கேட்ட பொழுது. அவர் சலவை வேலை செய்வதாக கூறினார். பின்னர் தான் அவருக்கு பெண்களின் ஆடைகளை துவைக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர் வசிக்கும் கிராமத்தில் சுமார் 2000 பெண்கள் உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் அடுத்த 6 மாதங்களுக்கு பெண்களின் ஆடைகளை இலவசமாக துவைக்க வேண்டும் என்று கூறினார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட லாலன் குமார் நீதிமன்ற உத்தரவை சரியாகப் பின்பற்றுகிறாரா? என கிராம சர்பஞ்ச் தலைவர் கண்காணிக்க வேண்டும் என கூறி லலான் குமாருக்கு ஜாமீன் வழங்கினார்.
also read : காதலன் - காதலி சண்டை; செல்போனால் மண்டையை உடைத்த காதலி
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment