நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Girlfriend On Rent: இங்கே காதலி வாடகைக்கு கிடைப்பார்; விலை என்ன?

 ஆணும் பெண்ணும் காதலிப்பதே தவறு என்று சொல்பவர்களுக்கு காதலிகள் வாடகைக்கு கொடுக்கும் தகவல் தெரிந்தால் என்ன செய்வார்கள்? 


காதல் என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே நெகிழ்வாக இருக்கும், அதை உணர்ந்து பார்த்தால் தான் அர்த்தம் புரியும் என்று சொல்வது உண்மையா? இந்த கேள்வியை எழுப்பும் கட்டுரை இது…

கலாசார பாதுகாவலர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் செய்தி இது. ஆணும் பெண்ணும் காதலிப்பதே தவறு என்று சொல்பவர்களுக்கு காதலிகள் வாடகைக்கு கொடுக்கும் தகவல் தெரிந்தால் என்ன செய்வார்கள்? 

இல்லை ஒன்றும் செய்ய முடியாது! ஏன் தெரியுமா? விசா வாங்கி, பிளைட் பிடித்து போய் கேள்வி கேட்க யாரும் தயாராக இருக்க மாட்டார்கள்…  காதலி இல்லை என்பதற்காக பெற்றோரிடம் திட்டு வாங்கிய அனுபவம் உண்டா?


சரி, காதலி எங்கே வாடகைக்கு கிடைக்கிறார் என்று சொல்லுங்கள் என்று கேட்பது தெரிகிறது. சீனாவில் பிறந்த இளைஞனாக இருந்தால் காதலியை கரெக்ட் பண்ணவில்லை என்று திட்டும் பெற்றோர் உங்களுக்கு கிடைத்திருக்கலாம்.

பெற்றோர்களின் கோபத்தைத் தவிர்க்க, சீன இளைஞர்கள் வாடகை தோழிகளை அழைத்துச் செல்கிறார்கள். சீனாவில், இதற்காக பல செயலிகள் உள்ளன, இதன் உதவியுடன் காதலிகளை வாடகைக்கு வைத்துக் கொள்ளலாம். 


பெரும்பாலான சீன இளைஞர்கள் விடுமுறைக்கு தங்கள் வீடுகளுக்குச் செல்லும்போது காதலிகளை வாடகைக்கு அமர்த்துகிறார்கள். இல்லையெனில் அவர்கள் பெற்றோரிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் கடினமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பல நேரங்களில் இளைஞர்கள் திருமணத்தின் முக்கியத்துவம் மற்றும் தோழிகளை உருவாக்குவது குறித்து உறவினர்களிடமிருந்து நீண்ட விரிவுரைகளை கேட்க வேண்டும். 
  
வாடகைக்கு வரும் தோழிகளின் நிபந்தனைகள்  

காதலியை வாடகைக்கு எடுக்கும் போது சில நிபந்தனைகளும் உண்டு. வாடகைக்கு காதலியை எடுக்கும் இளைஞர், அந்தப் பெண்ணைத் தொட முடியாது. பெண் அந்த நபருக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை அளிப்பார், அவருடைய காதலியைப் போல நடந்துகொள்வார்.  


காதலியை வேலைக்கு அமர்த்த, நீங்கள் நிறைய பணம் செலவழிக்க வேண்டும்

தகவலின் படி, ஒரு காதலியை வாடகைக்கு அமர்த்த, 1,999 யுவான் வரை அதாவது இந்திய மதிப்பில் சுமார் 22,816 ரூபாய் செலவிட வேண்டும். பின்னர் அவர்கள் வாடகைக்கு எடுத்த காதலியை தங்கள் குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தலாம். அந்தப் பெண்ணை டேட்டிங்குக்கு அழைத்துச் செல்லலாம், பேசலாம், பேசிக் கொண்டே இருக்கலாம். 

பெண் தோழிக்கான வாடகை அதிகம்  

சீனாவில் சந்திர புத்தாண்டின் போது, காதலியின் வாடகை மிகவும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் இளைஞர்கள் 3 ஆயிரம் முதல் முதல் 10 ஆயிரம் யுவான் வரை அதாவது, 34,241 ரூபாய் முதல் 1,14,139 ரூபாய் வரை வாடகை கொடுக்க வேண்டியிருக்கும்.
 
அந்நியரின் காதலியாக இருப்பது கடினமா?

வாடகைக்கு காதலியாக  பணிபுரியும் ஒரு பெண்ணின் கருத்து என்ன தெரியுமா?  ஒவ்வொரு முறையும் யாரோ ஒரு அந்நியரின் காதலியாக இருக்க வேண்டும் என்பதால் தங்களுடைய வேலை மிகவும் கடினம் என்று கூறுகிறார். .


also read : 23,000 ஆண்டு பழமையான மனிதனின் கால் தடங்கள் கண்டுபிடிப்பு!!


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!