லைவ் நிகழ்ச்சியில் பி.பி.சி. செய்தியாளரை குப்புற விழ வைத்த நாய் – வைரல் வீடியோ
- Get link
- X
- Other Apps
செல்ஷாவில் நடைபெற்ற மலர் கண்காட்சி ஒன்றில் தன்னுடைய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்ட காரோலுக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து செய்தி அறையில் அமர்ந்திருக்கும் வர்ணனையாளர்கள் சிரிக்கும் காட்சியும் இந்த வைரல் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
பி.பி.சி.யில் வானிலை அறிக்கை வாசிக்கும் செய்தியாளராக பணியாற்றி வரும் காரோல் கிர்க்வூட் தன்னுடைய நேரலை நிகழ்ச்சி ஒன்றின் போது நாயால் இழுத்துச் செல்லப்பட்ட காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
வானிலை அறிக்கையை கூறிய காரோல், செய்தி வர்ணனனையாளர்களான டான் வாக்கர் மற்றும் சாலி நுஜென்ட்டுடன் கெய்ட் நாய்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகே இருந்த ஃப்ளாஷ் என்ற நாயை அறிமுகம் செய்து வைத்து அவர் பேசிக் கொண்டிருந்த போது நாய் அவரை விட்டு விலகி செல்ல முயன்றௌ அதன் கழுத்தோடு கட்டியிருந்த பெல்ட்டை பிடிக்க முயற்சி செய்து காரோல் கீழே விழுந்துவிட்டார்.
அவள் மிகவும் நன்றாக நடந்த் கொண்டாள் என்று தான் கூற வேண்டும் என்று ஃப்ளாஷ் குறித்து பேசிக் கொண்டிருக்கும் காரோல் அந்த நாய் மிகவும் அழகாக இருக்கிறது என்றும் கூறும் காட்சியில் அந்த நாயுடன் எவ்வளவு நெருக்கமாக அவர் இணைந்துவிட்டார் என்று வீடியோவில் தெளிவாக தெரிகிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஃப்ளாஷ் செய்த செயல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செல்ஷாவில் நடைபெற்ற மலர் கண்காட்சி ஒன்றில் தன்னுடைய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்ட காரோலுக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து செய்தி அறையில் அமர்ந்திருக்கும் வர்ணனையாளர்கள் சிரிக்கும் காட்சியும் இந்த வைரல் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
ALSO READ : 8 நாளில் ₹27 லட்சத்துக்கு பிரியாணி பில் - அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment