நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தவறாக ஹேர்கட் - பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

 இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகார் மனுவில், ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சலூனில் சிகையலங்கார நிபுணரின் கவனக்குறைவால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.


வாடிக்கையாளருக்கு சரியாக ஹேர்கட் செய்யாததால், ரூ.2 கோடி இழப்பீடு வழங்க டெல்லியில் உள்ள பிரபல 5 நட்சத்திர ஹோட்டலான ஐடிசி மவுரியாவுக்கு தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலான ஐடிசி மவுரியாவில் உள்ள சலூனில் கடந்த 2018ம் ஆண்டு பெண் மாடல் ஒருவர் முக்கிய நேர்காணலுக்கு செல்வதற்காக ஹேர்கட் செய்ய சென்றுள்ளார். அங்கு சலூனில் உள்ள சிகையலங்கார நிபுணரிடம் முடியின் கீழ் பக்கத்திலிருந்து 4 அங்குலத்தை வெட்டும் படி கூறியுள்ளார். ஆனால், அந்த சலூனில் இருந்த முடி திருத்துபவரோ, அவரது முழு நீள முடியையும் வெட்டியுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் தேசிய நுகர்வோர் ஆணையத்தில் அளித்த புகார் மனுவில், ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சலூனில் சிகையலங்கார நிபுணரின் கவனக்குறைவால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். மேலும், ஹேர்கட் செய்ய சென்ற பெண் தனது கண்ணாடியை கழட்டி வைத்ததாகவும், ஹேர்கட் செய்ய ஏதுவாக தனது தலையை குனிந்தபடி இருக்குமாறு முடி திருத்துபவர் கூறினார். அதனால், முகக் கண்ணாடியில் ஹேர்கட் செய்வதை சரியாக பார்க்க முடியவில்லை.

அந்த நபர் எனது முடியை வெட்டி முடித்த பின்னரே என்னால் பார்க்க முடிந்தது, அவர் கீழிருந்து 4 அங்குலம் முடியை வெட்டுவதற்கு பதிலாக, மேலிருந்து 4 அங்குலத்திற்கு மட்டும் முடியை வைத்து விட்டு, மொத்த முடியையும் வெட்டி விட்டார்.

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், ஹேர்கட் செய்த தற்கான தொகையை அந்த பெண்ணிடம் இருந்த அந்த சலூன் பெறவில்லை, அதேநேரத்தில் தவறுதலாக ஹேர்கட் செய்த அந்த ஊழியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த சலூனின் மேலாளரிடம் இந்த சம்பவத்தை தெரிவிக்க சென்ற போது, அவர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த பெண் ஐடிசி ஹோட்டலின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி தீபக் ஹக்ஸரை அழைத்து, நடந்த சம்பவத்தை பற்றி அவருக்கு விவரித்துள்ளார்.

இதையடுத்து, அந்த பெண்ணுக்கு முடி வளர்வதற்கான சிகிச்சையை அளிக்க முன்வந்துள்ளனர். அதைத்தொடர்ந்தும், அவர் சலூன் ஊழியர்களின் அலட்சியத்தால், பாதிக்கப்பட்டுள்ளார்.

அந்த சிகிச்சையின் போது, அதிகப்படியான அம்மோனியாவால் அந்த பெண்ணின் தலைமுடி முற்றிலும் சேதமடைந்துள்ளது. அதோடு, அவர் உச்சந்தலையில் அதிக எரிச்சலும் ஏற்பட்டுள்ளது. இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை 3 ஆண்டுகளாக நுகர்வோர் நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில், VLCC மற்றும் Pantene போன்ற பிராண்டுகளுக்கு மாடலாக இருந்த அந்த பெண் சிறந்த மாடலாக விரும்பினார். ஆனால், தனது முடியை இழந்ததால், அந்த பெண்ணால் அவரது கனவை நிறைவேற்ற முடியவில்லை.

சலூனின் கவனக்குறைவு காரணமாக, அந்த பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், துறையின் தனது வேலை வாய்ப்புகளை இழந்ததாகவும், இது அவரது வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றி ஒரு சிறந்த மாடலாகும் கனவை சிதைத்துள்ளது.

இதனால், அந்த பெண்ணின் மன உளைச்சலையும், இழப்பையும் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் ஐடிசி மவுரியா ஹோட்டல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!