நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குழந்தைகள், டீனேஜர்ஸ்களை சத்தமின்றி தாக்கும் கேட்ஜெட்ஸ்கள் மீதான போதை நோய்..

 கோவிட் தாக்கத்தால் சத்தமில்லாமல் கண்ணுக்கு தெரியாத ஒரு நோயும் உலகை ஆட்டி வைத்து கொண்டிருக்கிறது.


20 மாதங்களுக்கும் மேலாக உலகை கட்டுப்படுத்தி வரும் கோவிட் பெருந்தொற்று காரணமாக மக்கள் பல வகைகளிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உச்சகட்டமாக மரணம் வரை இந்த தொற்று ஏற்படுத்தி வரும் நிலையில், கோவிட் தாக்கத்தால் சத்தமில்லாமல் கண்ணுக்கு தெரியாத ஒரு நோயும் உலகை ஆட்டி வைத்து கொண்டிருக்கிறது. அது தான் லேட்டஸ்ட் டெக்னலாஜி வளர்ச்சியின் விளைவாக நம் வீடுகளில் இருக்கும் மற்றும் கைகளில் புழங்கும் கேட்ஜெட்ஸ்கள் மீதான போதை நோய்.

கொரோனா 2-ம் அலை படிப்படியாக குறைந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், பல இடங்களில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக வீட்டிலேயே தான் இருக்கிறார்கள். சிலருக்கு ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடந்தாலும், வேறு சில மாணவர்களுக்கு படிப்பின் வாசனை மறந்து ஒன்றரை வருடங்களுக்கும் மேல் ஆகிறது. தொற்று அச்சத்தால் பிற குழந்தை நண்பர்களுடன் விளையாட பெற்றோர் அனுமதிக்காத நிலையில், தூங்கி எழுவது முதல் படுக்கைக்கு செல்வது வரை அவர்களை கையில் தவறாமல் தவழ்கிறது ஸ்மார்ட் போன்கள், டேப்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட பல கேட்ஜெட்ஸ்கள்.

இதனால் இந்த கோவிட் காலத்தில் இன்டர்நெட்/கேமிங்/மொபைல் அடிக்ஷன் முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உயரத்தை எட்டி உள்ளதாக கவலை தெரிவித்து உள்ளார்கள் உளவியல் நிபுணர்கள். ஆன்லைன் வகுப்புகளும் கூட மாணவர்களுக்கு பல மணிநேரங்கள் நடப்பதால் அவர்களும் தான் கேட்ஜெட்ஸ் அடிக்ஷன் பட்டியலில் வருகிறார்கள். ஆன்லைன் கேமிங் உள்ளிட்ட இன்டர்நெட் தொடர்பான பல விஷயங்களுக்கு எண்ணற்ற மாணவர்கள் அடிமையாகி, தற்போது சிகிச்சைக்காக நிபுணர்களிடம் அழைத்து வரப்படுவது நிலைமையின் விபரீதத்தை உணர்த்துகிறது.

இதுபற்றி கூறும் நிபுணர்கள் ஒருநிகழ்வில், கடும் இன்டர்நெட் அடிக்ஷனில் இருந்த ஒரு வாலிபன் அவனை கண்டித்த பெற்றோரை உடல் ரீதியாக தாக்க துவங்கியதாக கூறுகின்றனர். மற்றொரு நிகழ்வில் 4 வயது குழந்தை ஒன்று ஆன்லைன் வகுப்பின் போது பென்சிலை பிடித்து நோட்டில் எழுத மறுத்து, லேப்டாப் கீ போர்டை பயன்படுத்தி ஏ,பி,சி,டி-யை கற்று கொள்வதில் ஆர்வம் காட்டியதாக குறிப்பிடுகிறார்கள். இந்த நிலைகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரபல மனநல மருத்துவர் யாதன் பால் சிங் பல்ஹாரா, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இன்டர்நெட் அணுகலுக்கான விலை புரட்சி உள்ளிட்டவற்றால் இன்னும் 6 அல்லது 7 ஆண்டுகளில் கேட்ஜெட்ஸ் அடிக்ஷன் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம்.

ஆனால் கோவிட் வந்து இந்த நிலையை ஓராண்டிலேயே ஏற்படுத்தி விட்டது. தூக்கம், உணவு பிரச்சனைகள், சமூக/குடும்ப தொடர்புகள் குறைவது, மனநிலை கோளாறுகள், உடல் ரீதியான வன்முறை மற்றும் சுய-தீங்கு உள்ளிட்டவற்றை கேட்ஜெட்ஸ் அடிக்ஷன் மூலம் கோவிட் மறைமுகமாக செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பல பெற்றோர்கள் தங்களது சிறுவயது குழந்தைகள் அல்லது டீனேஜ் குழந்தைகளை கேட்ஜெட்ஸ் அடிக்ஷனிலிருந்து மீது மறுவாழ்வு பெற வைக்க நிபுணர்களை நாடி செல்லும் சம்பவம் சமீப காலமாக மிகவும் அதிகரித்துள்ளதாகவும் கூறுகிறார்கள் மனநல மருத்துவர்கள்.

கோவிட் -19 பெருந்தொற்று இளம் பருவத்தினரின் இன்டர்நெட் பயன்பாடு மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது இதன் மூலம் தெரிகிறது. பெரும்பாலான குழந்தைகளை கட்டுப்படுத்துவது கடினம் என்று கூறும் நிபுணர்கள், அவர்களது கேட்ஜெட்ஸ் அடிக்ஷனை படிப்படியாக தான் குறைக்க முயற்சிக்க வேண்டும். அதே போல சமூக ஊடகங்களின் நேர்மறை விளைவுகளை பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்க அவர்களது கேட்ஜெட்ஸ் அடிக்ஷனை நாம் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்