பிரிட்ஜ் மட்டும் தெரியவில்லை. என்னடா இது? பிரிட்ஜ் விற்பனைக்கு என போட்டோ போட்டிருக்கிறார்கள்.
பிரிட்ஜ் விற்பனைக்கு என பேஸ்புக்கில் போடப்பட்ட விளம்பரம், நெட்டிசன்களுக்கு புதிராக மாறியது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்டர்நெட் பயன்படுத்துபவராக இருந்தால், அதில் நேரம்போவதே தெரியாது. 24 மணி நேரமும் உங்களை பிஸியாக வைத்திருக்கும். கூடுதலாக நேரம் இருந்தால் கூட பத்தாது என்ற அளவுக்கு இன்டர்நெட்டில் மூழ்கிவிடுவீர்கள். அந்தளவுக்கு, ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களும், விளம்பரங்களும் குவிந்து கிடக்கின்றன.யூசர்களை மயக்குவதற்கென்றே சில வலைதளங்களும், கவர்ச்சிகரமான விளம்பரங்களும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக, பொருட்களை வாங்கவும், விற்கவும் பயன்படும் ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற பிரபலமான தளங்களில் நீங்கள் விளம்பரங்களின் கிரியேட்டிவிட்டியை பார்க்கலாம். அதில் இருக்கும் சில டெக்னிக்கல் பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் சிலர் தனியாகவும் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.அவர்கள், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களை தங்களுக்கான விற்பனை தளங்களாக பயன்படுத்துகிறார்கள். பிளிப்கார்ட், அமேசான் தளங்களில் கிடைக்காத பொருட்கள் இல்லை. ஆனால், அந்த தளங்களைக் கடந்து தங்கள் பக்கத்தில் வந்து ஒருவர் பொருட்களை வாங்க வேண்டும் என்றால், நீங்கள் கிரியேட்டிவிட்டியின் உச்சத்தை தொட்டால் மட்டுமே சாத்தியம்.அப்படியான, உச்சத்தை தான் பேஸ்புக்கில் விற்பனைக்கு வந்த பிரிட்ஜ் விளம்பரம் பெற்றது. யார் அந்த புகைப்படத்தை எடுத்தார்கள் என்ற விவரம் பதிவிடப்படவில்லை. ஆனால், பிரிட்ஜ் விற்பனைக்கு என்ற கேப்சனில் இருந்த புகைப்படம், நெட்டிசன்களை வியப்பின் உசத்துக்கே அழைத்துச் சென்றது. அதாவது, பிரிட்ஜ் விற்பனைக்கு போடப்பட்டிருந்த அந்த புகைப்படத்தில் மைக்ரோ ஓவன், சமையலறைப் பொருட்கள், கதவுகள் ஆகியவை தெளிவாக தெரிகின்றன.
ஆனால், பிரிட்ஜ் மட்டும் தெரியவில்லை. என்னடா இது? பிரிட்ஜ் விற்பனைக்கு என போட்டோ போட்டிருக்கிறார்கள், ஆனால் ஃபோட்டோவில் பிரிட்ஜ் இல்லையே என பலர் இரண்டு மூன்று முறை உற்றுப்பார்த்து தேடியிருக்கின்றனர். ஆனால் அவர்களால் பிரிட்ஜைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிலர், இது காமெடிக்காக இந்த புகைப்படத்தை பகிர்திருக்கிறார்கள் என நினைத்துள்ளனர்.
உண்மை என்னவென்றால், அந்தப் புகைப்படத்தில் பிரிட்ஜ் இருக்கிறது. கண்ணாடி டோர் கொண்ட பிரிட்ஜ் என்பதால், அந்த பிரிட்ஜின் டோரில் சமையலறை முழுவதும் பிரதிபலிக்கிறது. முதல் முறை நீங்கள் பார்த்தால், நிச்சயமாக அது சமயலறை என்று தான் கூறுவீர்கள். பிரிட்ஜை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. இரண்டு மூன்று முறை பார்த்த பிறகு மட்டுமே, நாம் சமையலறை பொருட்களை பிரிட்ஜின் டோரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என புரிந்து கொண்டு, தலையை முட்டிக்கொள்வீர்கள்.
அந்தளவுக்கு தத்ரூபமாக அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சில நெட்டிசன்கள், என்ன சோதனையடா சாமி, எத்தனை முறை தேடி தேடித் பார்த்தேன், ஒருமுறை கூட பிரிட்ஜை பார்க்கவில்லை. ஆனால், பிரிட்ஜில் தான் அந்த பொருட்களையே பார்த்திருக்கிறேன் என்று தெரிந்தபோது, என்னை நானே திட்டிக்கொண்டேன் எனக் கூறியுள்ளனர்.
நீங்கள் வேண்டுமானால் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்..
Comments
Post a Comment