நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மனம் விட்டு அழுதால் கிடைக்கும் நன்மைகள்

 அன்புக்குரியவர்களின் எதிர்பாராத பிரிவு, திடீரென்று மனதை உலுக்க வைக்கும் சம்பவங்கள் நடைபெறும்போது மனம் துவண்டு போகும். அழுகை வெளிப்படும். சோகம், துக்கம், துயரம், கவலை, இரக்கம் போன்ற எல்லா வகையான எண்ண ஓட்டங்களுடன் அழுகைக்கும் தொடர்பு இருக்கிறது.

சிலர் மன வேதனையில் இருக்கும்போது அழுதபடியே தங்களுடைய உணர்வுகளை, எண்ணங்களை கொட்டி விடுவார்கள். சிலர் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொண்டு மன இறுக்கத்துடன் இருப்பார்கள். ஆனால் மனதை காயப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெறும்போது அழுவதுதான் நல்லது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பெண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். அழுதும் விடுவார்கள்.

சராசரியாக பெண்கள் வருடத்திற்கு 30 முதல் 64 முறை அழுகிறார்கள் என்றும், ஆண்கள் 6 முதல் 17 முறை மட்டுமே அழுகிறார்கள் என்றும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதனால் பெண்களை காட்டிலும் ஆண்கள்தான் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகுவதாகவும் ஆய்வு கூறுகிறது. அழுவதால் உடலளவிலும், மனதளவிலும் வலி நீங்குவதாக மற்றொரு ஆய்வு குறிப்பிடுகிறது. அழும்போது கண்ணீரில் சுரக்கும் ஆக்ஸிடோசின் மற்றும் எண்டோர்பின்ஸ் மனதிற்கு அமைதியையும், வலியைத் தாங்கக் கூடிய வலிமையையும் தரும் என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனதுக்கு நெருக்கமானவர்கள் அழுது கொண்டிருந்தால் அவர்களுக்கு ஆறுதல் சொல்வது இயல்பானது. அத்தகைய ஆறுதலும், அரவணைப்பும் அவர்களுக்கு மன அமைதியை கொடுக்கும். அந்த சமயத்தில் அவர்களின் அழுகையை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிக்கக்கூடாது. அன்பான வார்த்தைகள் மூலமே ஆசுவாசப்படுத்த வேண்டும்.

மனதை ரணமாக்கும் நிகழ்வுகளின்போது மனம் விட்டு அழுதுவிட்டால் அதில் இருந்து படிப்படியாக மீண்டு வந்துவிட முடியும். சில நாட்களில் மனம் ரிலாக்ஸ் ஆகிவிடும். அழும்போது உடம்பில் ‘ஸ்ட்ரெஸ் ஹார்மோன் சுரந்து அது கண்ணீர் வழியாக வெளியே வந்துவிடும். இதனால் அந்த ஹார்மோன் சுரக்கும் அளவு குறைந்துவிடும் என்பதும் ஆய்வின் போது கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் அழுது கொண்டே இருந்தால் சிறிது நேரத்தில் சட்டென்று தூங்கிவிடுவார்கள். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அழுதால் தூக்கம் வரும். மனம் விட்டு அழுதாலோ, கதறி அழுதாலோ நிச்சயம் கண்ணீர் வரும். தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாலும் தூக்கம் கண்களை தழுவிவிடும். அழும்போது கண்களில் ஐசோஸைமி என்னும் அமிலம் சுரக்கும். அது கண்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்துவிடும். தொடர்ச்சியாக அழும்போது வறண்ட கண்களில் ஈரப்பதம் தக்கவைக்கப்படுவதும், கண் பார்வை தெளிவடைவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்