தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
இருளில் மூழ்கியுள்ள சீனா.. தினமும் 9 மணி நேரம் மின்தடை.. அடுத்த ஆண்டு மார்ச் வரை மின்தடை ஏன்?
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை சீனாவில் மின்வெட்டு பிரச்னை நீடிக்கலாம்.
சீனாவில் ஏற்பட்டுள்ள திடீர் மின்தடையால் பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. விண்வெளியில் சாதனைகளை நிகழ்த்திய சீனா மின்னொளியில் மண்ணைக் கவ்வியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
சந்திரனின் இருண்ட பாகத்தில் முதன்முதலில் விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்த சீனா, கடந்த சில நாட்களாக இருளில் சிக்கித் தவித்து வருகிறது.
மின் பற்றாக்குறையால் ஒட்டு மொத்த மாகாணங்களும் முடங்கிப் போவதைத் தவிர்க்க, ஆகஸ்ட் மாத மத்தியில் இருந்து சீனாவின் 16 மாகாணங்களில் சுழற்சி முறையில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. முறை வைத்து விநியோகிக்கப்படும் மின்சாரத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். லியோனிங் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக ஏற்பட்டுள்ள மின் தடையால் தெரு விளக்குகள் மற்றும் சிக்னல் விளக்குகள் என எதுவும் வேலை செய்யவில்லை. நெடுஞ்சாலையில் திடீரென விளக்குகள் எரியாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குடியிருப்புப் பகுதிகளில் பெரும்பாலும் பகல் நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதே சமயம் இரவு நேரங்களில் வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அமலில் இருக்கும் என்பதால், அதற்குள் தங்கள் வேலைகளை முடிக்க மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். 20 மாடிகள், 30 மாடிகள் என உயர்ந்து நிற்கும் கட்டடங்களில் லிப்ஃட் வசதியின்றி குடியிருப்புவாசிகள் தவித்து வருகின்றனர்.
மின்சாரம் இன்றி பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்திக் குறைப்பு அல்லது உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சில தொழிற்சாலைகள் வாடகை ஜெனரேட்டர்கள் மூலம் உற்பத்தியை தொடர்ந்தாலும், இது மின்சாரத்திற்கான செலவை இரு மடங்காக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. சீனாவின் கட்டுமான வளர்ச்சிக்கு பெரிதும் தேவைப்படும் இரும்பு மற்றும் சிமெண்ட் உற்பத்தி இந்த மின் தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலுக்குப் பின் உலகம் சற்றே மீண்டெழுந்து வரும் நிலையில், சர்வதேச அளவில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆர்டர்களை முடித்துத் தரவேண்டிய கட்டாயத்தில் சீன நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அதற்கு பெரும் சவாலாக இந்த மின் தடை உருவெடுத்துள்ளது. இதனால் செல்ஃபோன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிலக்கரி பற்றாக்குறை மற்றும் காற்று மாசைக் குறைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த நிலை நீடிக்கலாம் என்பதால் அதுவரை முறை வைத்து வழங்கப்படும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு, மக்களை மாகாண நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. அலுவலகங்களில் மூன்று மாடிகள் வரை லிஃப்ட்களை பயன்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெரும்பாலும் இயற்கையான ஒளியை பயன்படுத்துமாறும், குறைந்த அளவில் குளிர்சாதன வசதியை உபயோக்கிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த மின்தடை சீனாவின் பொருளாதாரத்தை இருளில் தள்ளிவிடும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். 2021 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் சீன பொருளாதாரம் 4,4 லிருந்து 3 சதவீதமாக குறையும் என தனது கணிப்பை மாற்றியிருக்கிறது ஜப்பானின் நொமுரா நிதி நிறுவனம். சீனாவில் ஏற்பட்டுள்ள மின் தடை உலகச்சந்தையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் மின் தடையிலிருந்து சீனா மீளும் நாளை எதிர்நோக்கி எல்லோரும் காத்திருக்கின்றனர்.
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
பாகிஸ்தானின் இந்த சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லை. 120 வயது வாழும் மக்கள் இது பாகிஸ்தான் மக்களின் ஆரோக்கிய கதை 90 வயதிலும் குழந்தை பெறும் பெண்கள். ஒரு கிராமத்தில் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், அவர்களுக்கு நோய் ஏற்படுவதில்லை என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது உண்மை தான். அதுவும், பிரச்சனைகள் அதிகம் இருக்கும் பாகிஸ்தானில்தான் அப்படியொரு ஊர் இருக்கிறது. வட பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தின் மக்கள் மீது பல வகையான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான், தற்போது அரசியல் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காரணமாக அண்மை நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர மற்றொரு சிறப்பு விஷயம் குறித்தும் பாகிஸ்தானின் பெயர் உலக அளவில் அடிபடுகிறது.. அதுதான் இங்கு குடியேறிய ஹன்சா சமூகத்தின் ஆரோக்கியம் அளிக்கும் ஆச்சரியமே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஹன்சா சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கின்றனர் இன்று உலகம் முழுவதும் மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. ம...
பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. திடீரென்று ஒரு பாம்பை, அதுவும் கருநாக பாம்பை பார்த்தால் என்ன நடக்கும்? நம்மைக் காப்பாற்றிக் கொள்ள அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம். ஆனால், சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு கண்ணாடியில் குவளையில். விஷம் நிறைந்த கரு நாகப்பாம்புக்கு தண்ணீர் கொடுப்பதைக் காணலாம். இந்த காணொளியை பார்த்தவர்கள் பயத்தில் உறைந்து போவது உறுதி. வைரலான வீடியோவில், ஒரு நபர் தனது கையில் ஒரு கிளாஸ் தண்ணீர் வைத்திருப்பதை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், அவருக்கு மிக அருகில் ஒரு கருப்பு நாகத்தையும் காணலாம். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ சிலருக்கு ஆச்சர்...
Comments
Post a Comment