நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்கள் சருமத்தை பொலிவாக்க உதவும் இயற்கை மூலிகைகள் : பக்கவிளைவுகள் இல்லாதது..!

 நமது வீட்டில் கிடைக்கும் சில இயற்கை பொருட்களே நமது அழகை பராமரிக்க போதுமானது. பெரும்பாலான தோல் பிரச்சனைகளுக்கு துளசி, வேம்பு, மஞ்சள் போன்ற இயற்கை பொருட்களே போதுமானது.


தற்போது சந்தைகளில் எண்ணற்ற சரும பராமரிப்பு பொருட்கள் வந்துவிட்டது. சோப்பு, பேஸ் வாஷ், லோஷன், டோனர், க்ரீம்கள், மாய்சரைசர்ஸ் என்ன அடிக்கடி கொண்டே செல்லலாம். ஆனால் இவை அனைத்தும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் நிறைந்தது. இவற்றை வாங்கி பயன்படுத்துவதால் நாளடைவில் நமது சருமம் வயதான தோற்றத்திற்கு மாறி விடுகிறது. இதற்கு பதிலாக நமது வீட்டில் கிடைக்கும் சில இயற்கை பொருட்களே நமது அழகை பராமரிக்க போதுமானது. பெரும்பாலான தோல் பிரச்சனைகளுக்கு துளசி, வேம்பு, மஞ்சள் போன்ற இயற்கை பொருட்களே போதுமானது. எனவே உங்கள் சரும பிரச்சனைகளை குணப்படுத்த உதவும் இயற்கை பொருட்கள் குறித்து நாம் இங்கு காண்போம்.,

வேம்பு :
 வேம்பில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி சரும அழகை பராமரிக்கவும் உதவுகிறது. இது சரும தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கவும், எரிச்சலை ஆற்றவும் மற்றும் சருமத்தை உள்ள கரும்புள்ளிகளை சரி செய்யவும் உதவுகிறது. மழைக்காலத்தில் தொற்றுநோய்கள் வராமல் இருக்க வேம்பு கலந்த நீரில் குளிக்கலாம்.தேமல், முகப்பரு போன்றவை நீங்க 5, 6 வேப்பிலையை அரைத்து சாறெடுத்து ஒரு ஸ்பூன் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தாலே குணம் பெறலாம்.

சந்தனம் : 
சந்தனம் சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. முகப்பருவால் அவதிப்படுபவர்கள் சருமத்தில் சந்தனத்தை அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது சருத்தில் உள்ள சுருக்கங்களை சரி செய்து வயதான தோற்றத்தை நீக்குகிறது. இதிலுள்ள ஆண்டிசெப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அனைத்து வகையான சரும பிரச்சனைகளையும் நீக்கி சருமத்தை பொலிவாக மாற்றுகிறது. இதற்கு சந்தன பேஸ்டை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தி வரலாம். மேலும் சந்தனத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் சூரியனால் ஏற்படும் கருமையை அகற்ற உதவுகின்றன.

குங்குமப்பூ :
 சருமத்திற்கு நன்மை பயக்கும் பல வகையான வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் குங்குமப்பூவில் உள்ளது. அதனால் தான் குங்குமப்பூ பல அழகு சாதனப் பொருட்களில் ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சந்தனம், சிறிதளவு குங்குமப்பூ மற்றும் இரண்டு ஸ்பூன் பாலை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக முகத்தை கழுவிய பின் இவை மூன்றையும் கலக்கி முகத்தில் நன்கு பூசுங்கள். நன்கு மசாஜ் செய்து 20 நிமிடம் பிறகு கழுவுங்கள். இதனை வாரம் ஒருமுறை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.

மஞ்சள் : 
மஞ்சள் பூசி குளிப்பது நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து தொன்றுதொட்டு வரும் பழக்கமாக இருக்கிறது. ஆனால் தற்போது பலரும் அதனை பின்பற்றுவதில்லை. குறிப்பாக கஸ்தூரி மஞ்சள் சருமத்திற்கு எண்ணற்ற நற்பலன்களை தருகிறது. இது முகப்பரு மற்றும் முகப்பரு வடுக்கள் போன்ற பல தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க மஞ்சள் உதவுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும். மஞ்சளையும். பூலாங்கிழங்கையும் சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.

துளசி :
 துளசி இலைகள் உடலில் உள்ள பிரச்சனைகளைப் போக்க மட்டுமின்றி, சரும பிரச்சனைகளைப் போக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. இதற்கு அதில் உள்ள ஆன்டி-செப்டிக் தன்மைகள் தான் முக்கிய காரணம். இதனால் பருக்கள், கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் போன்றவை எளிதில் மறையும். ஒரு கையளவு துளசி இலைகளை அரைத்து, அத்துடன் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இறுதியில் ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுங்கள். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சரும நிறத்தை அதிகரிக்க உதவும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்