நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கோவில் வாசலில் சினிமா பாடலுக்கு நடனமாடியதால் இளம் பெண் மீது வழக்கு பதிவு - வைரலாகும் வீடியோ

 இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதற்காக கோவிலின் வெளியே நடனமாடியதாக பஜ்ரங்தள் தலைவர் புகார் அளித்ததை அடுத்து இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே பாலிவூட் பாடலுக்கு நடனம் ஆடிய இளம்பெண் வீடியோக்கள் இணையத்தில் வைரலானதால், இளம் பெண் மீது ஞாயிற்றுக்கிழமை காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.

இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதற்காக ராமர்-சீதா கோவிலின் வெளியே நடனமாடியதாக பஜ்ரங்தள் தலைவர் புகார் அளித்ததை அடுத்து இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடியோக்கள் குறித்து பஜ்ரங்தள் தலைவர் சுரேந்திர ஷிவஹரே அளித்த புகாரைத் தொடர்ந்து, ஆர்த்தி சாஹு என்ற பெண் மீது ஐபிசி பிரிவு 298 (எந்த நபரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்துடன் IPC section 298 ) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இளம்பெண் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கொண்டுள்ளார். நடன வீடியோக்களை பதிவிடுவது, சினிமா வசனங்களை பேசி அதற்கு தகுந்தாற் போன்று வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். இது குறித்த புகாரில் சாஹு ( இளம்பெண்)வேண்டுமென்றே கோவில் முன் ஆபாசமாக நடனமாடியதாகவும், அந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் உள்நோக்கத்துடன் பகிர்ந்து கொண்டதாகவும் கூறினார். இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் அவர் இவ்விதம் செய்ததாக தனது புகாரில் கூறியுள்ளார்.

இந்த புகார் குறித்து சாஹு தெரிவிக்கையில், தனது சிறு வயதிலிருந்தே கோவிலுக்கு செல்வதாக கூறினார். மேலும் எனது வீடியோக்கள் அவர்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் நான் வருந்துகிறேன். அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். இது எனது நோக்கம் அல்ல,என்று கூறினார், இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிடுவதே தனது குடும்பத்திற்கு முக்கிய வருவாய் ஆதாரமாகும் என கூறியுள்ளார்.

சாஹு தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து அந்த வீடியோக்களை நீக்கியதாகவும் கூறியுள்ளார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்