நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்களுக்கு தெரியுமா..? இந்த நாடுகளில் சூரியனே மறையாதாம்..!

 உலகின் சில இடங்களில் 70 நாட்களுக்கும் மேலாக சூரியனின் அஸ்தமனமே இருக்காது. படிப்பதற்கு வியப்பாக இருந்தாலும் பூமியின் விசித்திரங்களில் ஒன்று.

பொழுதுவிடிந்தால் வேலை, பொழுது சாய்ந்தால் தூக்கம் என்றிருக்கும் நமக்கு, சூரியன் மறையாத இடங்கள் இருக்கிறது என்றால் நம்ப முடியுமா?. ஆனால், இந்த தகவல் உண்மை தான். உலகின் சில இடங்களில் 70 நாட்களுக்கும் மேலாக சூரியனின் அஸ்தமனமே இருக்காது. படிப்பதற்கு வியப்பாக இருந்தாலும் பூமியின் விசித்திரங்களில் ஒன்று. சுற்றுலா பிரியராக இருந்தால், சூரியனின் அஸ்தமனம் இல்லாத 6 இடங்களை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறையாவது அங்கு சென்று, அந்த சுவாரஸ்யத்தை அனுபவித்தை வாருங்கள்.
1. நார்வே : 
ஆர்க்டிக் வட்டத்தில் அமைந்துள்ள நார்வேயில் சூரியன் தொடர்ச்சியாக 76 நாட்களுக்கு மறையாமல் இருக்கும். அந்த குறுப்பிட்ட நாட்கள் முழுவதும் வெறும் பகல் பொழுதாக மட்டுமே இருக்கும் அப்பகுதி, நார்வே 'லேண்ட் ஆப் மிட்நைட் சன்' (Land of the Midnight Sun) என்று அழைக்கப்படுகிறது. இங்கு மே மாதம் துவக்கம் முதல் ஜூலை மாதம் இறுதி வரை சூரியன் மறைவதில்லை. இந்த காலத்தில் நீங்கள் நோர்வே சென்றால் வெறும் பகல் பொழுதை அனுபவிக்கலாம். நோர்வேயின் ஸ்வால்பார்டில் (Svalbard), ஏப்ரல் 10 முதல் ஆகஸ்ட் 23 வரை சூரியன் தொடர்ந்து பிரகாசிக்கிறது.
2. நுனாவுட், கனடா : 
கனடாவின் வடமேற்குப் பகுதிகளில் ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே இரண்டு டிகிரிக்கு மேல் நுனாவுட் (Nunavut) என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடம் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு மேலாக முழு சூரிய வெளிச்சத்தில் மட்டுமே இருக்கும். வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் இங்கு சூரியன் அஸ்தமனம் ஆகாமல், பகல் பொழுதாக நீடிக்கிறது. அதேசமயம், குளிர்காலத்தில் இந்த இடம் தொடர்ந்து 30 நாட்களுக்கு முழுமையாக இருளாக இருக்கிறது.
3. ஐஸ்லாந்து : 
கிரேட் பிரிட்டனுக்குப் பிறகு ஐரோப்பாவின் மிகப்பெரிய தீவு என்றால் அது ஐஸ்லாந்து. கொசுக்கள் இல்லாத அதிசய நாடாகவும் அறியப்படும் ஐஸ்லாந்தில், ஜூன் மாதத்தில் சூரியன் மறைவதில்லை. மிட்நைட் சன் என்று அழைக்கப்படும் நள்ளிரவு சூரியனின் அழகை ரசிக்க வேண்டும் என்றால், ஆர்க்டிக் வட்டத்தில் உள்ள அக்குரேரி நகரம் மற்றும் கிரிம்சி தீவுக்குச் (Akureyri and Grimsey Island) செல்லலாம்.
4. பாரோ, அலாஸ்கா : 
அலாஸ்காவில் உள்ள பாரோ (Barrow) இடத்திலும் சூரியனின் அஸ்தமனம் இருக்காது. மே மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கி ஜூலை இறுதி வரை சூரியனின் அஸ்தமன் இருக்காது. நவம்பர் தொடக்கத்தில் இருந்து அடுத்த 30 முழு இருளாக அப்பகுதி இருக்கும். இந்தக் குறிப்பிட்ட காலப் பகுதியை துருவ இரவு நேரம் என அழைக்கப்படுகிறது. பனி மூடிய மலைகள் மற்றும் மயக்கும் பனிப்பாறைகளுக்குப் புகழ்பெற்ற இந்த இடத்தை கோடை அல்லது குளிர்காலத்தில் பார்வையிடலாம்.

5. பின்லாந்து : 
ஆயிரம் ஏரிகள் மற்றும் தீவுகளின் நிலம் என்று அழைக்கப்படும் பின்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் சூரியனின் அஸ்தமனத்தை காண முடியாது. கோடைக்காலத்தில் மட்டும் தொடர்ச்சியாக 73 நாட்களுக்குச் சூரியன் அஸ்தமனம் இல்லமால், முழு பகல் பொழுதாக இருக்கும். அதேசமயம், குளிர்காலத்தில் இந்த பகுதியில் சூரிய ஒளி இருக்காது. இங்கு வசிக்கும் மக்கள் தான் பூமியில் அதிக நேரம் விழித்திருக்கும் மக்களாகக் கருதப்படுகின்றனர். காரணம், தொடர்ச்சியான சூரிய பிரகாசத்தினால் இவர்கள் கோடையில் குறைவாக உறங்குகின்றனர். அதேநேரத்தில், குளிர்காலத்தில் நிகழும் நீண்ட இரவு நேரத்தின் காரணமாக இங்கு வசிக்கும் மக்கள் அதிகமாகத் தூங்குவதாகக் கூறப்படுகிறது.

6. ஸ்வீடன் : 
இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது ஸ்வீடன். இங்கு மே தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரை இங்கு நள்ளிரவில் தான் சூரியன் மறையும். அதேபோல், மறைந்த சிறிது நேரத்தில், அதாவது அதிகாலை 4 மணியளவில் நாட்டில் மீண்டும் சூரியன் உதயமாகும். வருடத்தில் 6 மாதங்கள் வரை ஸ்வீடன் முழு சூரிய ஒளியின் கீழ் இருக்கும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!