நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நடனம் ஆடும் இளம் தாலிபான்கள்- இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அரசு கடும் விதிமுறைகளை அமல்படுத்தி வரும் நிலையில் இளம் தாலிபான்கள் நடனம் ஆடும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.


ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆதரவுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 20 ஆண்டுகள் ஆட்சி செய்த நிலையில் தற்போது அந்நாடு தாலிபான்களின் கைகளுக்குச் சென்றுள்ளது. பழமைவாத சிந்தனை கொண்ட தாலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுக்குள் சென்றதிலிருந்து அந்நாடு குறித்த எண்ணற்ற நினைத்துப் பார்க்க முடியாத செய்திகள் வெளிவருகின்றன.

தற்போது ஒரு நகைச்சுவையான செய்தி உலக அளவில் வைரலாகிவருகிறது.மாலை மங்கும் நேரத்தில் அர்கந்தாப் நதிக்கரையில் படமாக்கப்பட்டுள்ள இந்தக் காட்சியில் தேசபக்திப் பாடல் ஒன்றுக்கு 7 தாலிபான்கள் இணைந்து நடனம் ஆடு்கின்றனர். இதுபோன்ற காட்சிகளை 20 ஆண்டுகளுக்கு முன்பாக நினைத்துக்கூட பார்க்க முடியாது என்கின்றனர் அங்குள்ள மக்கள்.

1996 முதல் 2001 வரையிலான தாலிபான்கள் ஆட்சியில் இசை மற்றும் நடனம் தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் இந்தக் காட்சிகளை காண்போர், தேசபக்தி பாடல்களையாவது கேட்டு அதற்கு நடனம் ஆடும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்களே என்று கூறும் நிலையில், இன்னும் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை மறுத்து வருகிறார்களே என ஒரு சாரார் விவாதங்களை கிளப்பியுள்ளனர்.




ALSO READ : தவறாக ஹேர்கட் - பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!
 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!