நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் : நாசா கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை நாசா கண்டறிந்தது.
செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ள இன்சைட் லேண்டர் பதிவு செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. 4.2 ரிக்டர் அளவு கொண்ட அரை மணி நேர நீண்ட ஒரு நிலநடுக்கம் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டதாக நாசா கூறி உள்ளது. இது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். 

இதற்கு முன்பு, ஆகஸ்ட் 25 அன்று 4.2 மற்றும் 4.1 ரிக்டர் அளவு கொண்ட இரண்டு நிலநடுக்கங்களை இன்சைட் லேண்டர் பதிவு செய்து உள்ளது. இருப்பினும், சமீபத்திய நிலநடுக்கம் முந்தைய பதிவுகளை விட ஐந்து மடங்கு வலிமையானது என்று நாசா கூறி உள்ளது.
2019 இல் 3.7 ரிக்டர் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது இன்சைட் லேண்டர் கிட்டத்தட்ட 8,500 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. நீண்ட தூரத்திலிருந்து ஒரு பெரிய அதிர்வைக் கண்டறிந்தது இதுவே முதல் முறையாகும். நாசா விஞ்ஞானிகள் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்