செல்ல நாய்க்கு அடித்த யோகம்; விமானத்தில் ‘சொகுசு’ பயணம்
- Get link
- X
- Other Apps
ஆண்டாண்டு காலங்களாக, நாய்கள் மிகவும் நன்றியுள்ள பிராணி என்றும் 'நாய்கள் மனிதனின் சிறந்த நண்பர்' என்று கூறப்படுகிறது.
ஆண்டாண்டு காலங்களாக, நாய்கள் மிகவும் நன்றியுள்ள பிராணி என்றும் 'நாய்கள் மனிதனின் சிறந்த நண்பர்' என்று கூறப்படுகிறது. இது மட்டுமல்ல, செல்ல நாய் எனது உயிருக்கு உயிரானது என்று எடுத்துரைக்கும் வகையில் ஒரு வினோதமான சமபவம் நிகழ்ந்துள்ளது.
தனது நாயை விட்டு பிரிய விரும்பாத ஒருவர், தனது செல்ல நாய்க்காக, விமானத்தின், அதிக கட்டணம் உள்ள சொகுசு வகுப்பான பிஸினஸ் கிளாஸ் டிக்கெட் முழுவதையும் வாங்கி விட்டார். ஆம், இந்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவத்தில், மும்பையில் இருந்து சென்னைக்கு பயணித்த ஒருவர், 2.5 லட்சத்திற்கும் மேல் செலவு செய்து தனது செல்லமான வளர்ப்பு நாயுடன் பயணிக்க ஏர் இந்தியா விமானத்தின் பிஸினஸ் கிளாஸ் டிக்கெட் முழுவதையும் வாங்கி விட்டார்.
விமானத்தின் பிஸினஸ் கிளாஸில் சுகமாக பயணிக்கும் வாய்ப்பைப் பெற்ற அதிர்ஷ்ட வளர்ப்பு நாய், ஒரு மால்டிஸ் பனிப் பர்பால் (Maltese snowy furball) வ்கை நாய் ஆகும். நாயும் அதன் எஜமானரும் புதன்கிழமை காலை 9 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானமான AI-671 விமானத்தில் ஏறினர்.
மும்பையில் இருந்து சென்னைக்கு புதன்கிழமை ஏர் இந்தியா விமானத்தின் ‘J’ அல்லது பிஸினஸ் கிளாஸ் என்னும் வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது, இதனால் தனது எஜனமானருடன் ‘ஆடம்பரமாக மற்றும் சொகுசாக’ அந்த செல்ல நாய் பயணம் செய்தது. Airbus A320 என்ற இந்த விமானத்தில் 12 பிஸினஸ் கிளாஸ் வகுப்பு இருக்கைகள் இருந்தன.
மும்பையிலிருந்து சென்னைக்கு இரண்டு மணி நேர விமானத்தில் பயணம் செய்வதற்கான பிஸினஸ் கிளாஸ் கட்டனம், டிக்கெட்டுக்கு ரூ .18,000 முதல் ரூ .20,000 வரை செலவாகும். தற்போது, ஏர் இந்தியா சில நிபந்தனைகளின் கீழ் செல்லப்பிராணிகளை அதன் விமானங்களில் பயணிக்க அனுமதிக்கிறது.
ALSO READ : ஏலத்தில் 50 லட்சம் ரூபாய் சம்பாதித்த அரிய நாணயம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment