நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

விமான பயணத்தின் போது கோப்புகளை பார்த்த 4 இந்திய பிரதமர்கள்... வைரலாகும் புகைப்படங்கள்

 பிரதமர் மோடியின் விமான பயணப் புகைப்படம், இதே போல நீண்ட தூர விமான பயணத்தில் கோப்புகளை பார்த்தபடி சென்ற முன்னாள் பிரதமர்களை நினைவு கூற வைத்துள்ளது.


குவாட் மாநாடு, ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்துள்ளார். முன்னதாக அவர் டெல்லியில் இருந்த தனி விமானத்தில் வாஷிங்டன் புறப்பட்டுச் சென்றபோது பிரதமர் மோடி தனது நீண்ட விமானப் பயணத்தில் பல்வேறு முக்கியக் கோப்புகள், அலுவலகப் பணிகளைக் கவனித்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்படத்தையும் தனது சமூக வலைதளபக்கங்களில் பகிர்ந்த பிரதமர் மோடி “நீண்ட விமானப் பயணம் என்பது சில கோப்புகளைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது,” என குறிப்பிட்டிருந்தார்.


இதையடுத்து, பிரதமர் மோடி விமானத்தில் அலுவலகப் பணிகளை கவனிக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் பகிரபட்டு வைரலானது. பிரதமர் மோடி விமானத்தில் பணிகளை கவனிக்கும் புகைப்படம் வைரலானதை தொடர்ந்து, முன்னாள் இந்திய பிரதமர்கள் இதுபோல விமானத்தில் பணிகளை மேற்கொண்ட புகைப்படங்களும் தேடி கண்டெடுக்கப்பட்டு அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


அந்த வகையில், இந்தியாவின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி விமான பயணத்தின் போது, பல்வேறு கோப்புகளை பார்த்தபடி இருக்கும் புகைப்படும் தற்போது வெளியாகியுள்ளது. அதில், கையில் பேனாவுடன் கோப்புகளை பார்த்தபடி லால் பகதூர் இருக்கிறார். அவருக்கு முன்னாள் பல கோப்புகளும் கிடக்கின்றன.

லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி, தனது தாத்தா விமானத்தில் சென்றபோது கோப்பு பார்த்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


அதேபோல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விமான பயணத்தில் வேலை செய்வது போன்ற புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதில், ராஜீவ் காந்தி கணிணியில் பணிபுரிந்த படி இருக்கிறார். அவரது மேஜையில் உணவுகளும் பக்கத்தில் உள்ளன.



இதுபோலவே முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் விமானத்தில் கோப்பு பார்த்த புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்