நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொய்யா இலை சருமத்தை ஜொலிக்க வைக்குமாம்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே..

பளபளக்கும் சருமத்திற்கு கொய்யா இலையே போதுமானது.
கொய்யா பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதே நேரத்தில் கொய்யா இலைகள் உங்கள் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக முகப்பரு, வடுக்கள், பிக்மண்டேஷன் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

கொய்யா இலைகளிலும் பழத்தில் உள்ளது போலவே பொட்டாசியம் மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்திருப்பதால் அவை உங்கள் சருமத்திற்கு ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். ஆயுர்வேத மருத்துவர் பிரியா சமீபத்தில் கொய்யா இலையின் நன்மைகள் குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

கொய்யா இலையில் ஐசோஃப்ளேவனாய்டுகள் உள்ளதால் இவை ஆண்டிமைக்ரோபியல்தன்மைகளை பெற்றுள்ளது, மேலும் காலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், கரோட்டினாய்டுகள் தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் அழற்சி நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதேபோல இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தோல் சேதத்தை சரிசெய்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொய்யா இலைகளை சருமத்திற்கு பயன்படுத்துவது எப்படி?

தேவையான பொருட்கள்

* கொய்யா இலைகள் - 10

* தண்ணீர் - 1 கப்

இதனை நன்கு மிக்சியில் அரைத்து கொள்ளவும். இப்போது உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவிட்டு, ஆவி பிடிக்கவும். இது உங்கள் சரும துளைகளைத் திறக்க உதவும். பின்னர் நீங்கள் தயாரித்து வைத்துள்ள கொய்யா இல்லை பேஸ்ட்டை எடுத்து உங்கள் முகத்தில் தடவவும். இது லேசாக உலர்ந்தவுடனேயே குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். அனைத்து சரும பிரச்சனைகளும் நீங்கி தெளிவான சருமத்தை பெற, ஒரு வாரத்தில் 2-3 முறை இதை செய்து வாருங்கள். இந்த பேஸ்டை பயன்படுத்தும் போது சருமத்தில் லேசான எரிச்சல் சாதாரணமானது. ஆனால் உங்களுக்கு சென்சிடிவ் சருமமாக இருந்தால், நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்னர் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்வது நல்லது. தேவைப்பட்டால் இதில் தயிரும் சேர்த்து கொள்ளலாம்.

இளமையான தோற்றத்திற்கு :

தேவையானவை :

கொய்யா இலைகள் - 10

தயிர் - 1/2 கப்.

செய்முறை

தேவையான அளவு கொய்யா இலைகளை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்

அதன் பின் தண்ணீரில் முகத்தை கழுவி விடுங்கள். இதனை வாரம் இரண்டு முறையாவது செய்து வந்தால் நல்ல பலனை எதிர் பார்க்கலாம்.

சரும நிறம் அதிகரிக்க :

அனைவருக்கும் நல்ல பொலிவான மற்றும் சிவந்த சருமம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும், அதற்கு கீழ்க்காணும் முறையை பின்பற்றுங்கள்.,

தேவையான பொருட்கள்

கொய்யா இலைகள் - 10

முல்தானி மட்டி - 3 ஸ்பூன்

பன்னீர் / ரோஸ் வட்டார் - 5 துளிகள்

செய்முறை

முதலில் கொய்யா இலைகளை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிது முல்தானி மட்டி, ரோஸ் வட்டார் சேர்த்து நன்கு கலக்கவும் இந்த கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து அப்படியே 3௦ நிமிடங்கள் விட்டு விடவும். பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், சரும நிறம் அதிகரிக்கும்.

எண்ணெய் சருமத்திற்கு..

தேவையான பொருட்கள்

கொய்யா இலைகள் - 5

எழுமிச்சைபழச் சாறு - இரண்டு தேக்கரண்டி

செய்முறை

கொய்யா இலைகளை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இதனுடன் இரண்டு தேக்கரண்டி எழுமிச்சைபழச் சாறு சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விடவும். இப்படி வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் எண்ணெய் பசை நீங்கி உங்கள் சருமம் பொலிவாகும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்