நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டாடா தயாரித்து வழங்கும் Airbus C295 ரக ஏர் லிஃப்டர் விமானங்களின் சிறப்புகள்!

 இந்த விமானத்தை பல்வேறு வகையில் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். நடுவானின் எரிபொருள் நிரப்பவும் பயன்படுத்தலாம். தேவைப்படும் போது எமர்ஜென்ஸி மருத்துவமனையாக மாற்றிக்கொள்ளலாம்.


இந்திய விமானப்படையை மேலும் நவீனப்படுத்தும், பலப்படுத்தும் வகையில் புதிய ரக போக்குவரத்து விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ள மத்திய பாதுகாப்புத்துறை ஏர்பஸ் நிறுவனத்துடன் மெகா ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. அதன்படி ஏர்பஸ் 56 எண்ணிக்கையிலான சி295 ரக போக்குவரத்து விமானங்கள் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட உள்ளன.

தற்போது விமானப்படையின் பயன்பாட்டில் உள்ள ஏவ்ரோ விமானங்களுக்கு மாற்றாக இந்த மத்திய ரக போக்குவரத்து விமானங்கள் இருக்கும். இந்த விமானங்கள் 5 முதல் 10 டன் எடை கொண்டதாகும். இந்த விமானங்கள் அதிக உயரத்திலும், அனைத்து வகையான தட்பவெப்பநிலையிலும் சிறப்பாக செயல்படக்கூடியதாகும். மேலும் பலதரப்பட்ட மிஷன்களுக்காக இவற்றை பயன்படுத்தலாம்.

இவ்விமானங்களை பயன்படுத்தி அதிகமான எடையை போக்குவரத்து செய்ய முடியும், இதன் காரணமாக படைத்துருப்புகள், கார்கோ போக்குவரத்து இலகுவாகும். இந்த வகை விமானங்கள் கனடா, எகிப்து, ஸ்பெயின், இந்தோனேசியா என பல நாடுகளின் விமானப்படையையும் அலங்கரிக்கின்றன. இந்தியா வாங்கும் 56 விமானங்களில் 40 விமானங்கள் டாடா கன்சார்டியம் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன. இதற்காக டாடா நிறுவனமும், ஏர்பஸ் நிறுவனமும் ஒப்பந்தம் போட்டுள்ளன.

ஏர்பஸ் சி295 விமானத்தின் சிறப்புகள்:

ரேஞ்சு: 2000 என்எம் (6 டன் பேலோட்)

பறக்கும் நேரம்: தொடர்ச்சியாக 11 மணி நேரங்கள்

பாரம் சுமக்கும் திறன்: 71 படைதுருப்புகள், 50 பாரா துருப்புகள் (கார்கோவுடன்)

காக்பிட்: கண்ணாடியுடன் கூடியது


இந்த விமானத்தை பல்வேறு வகையில் மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்பது விஷேச சிறப்பாகும். 7,000 லிட்டர் தண்ணீர் நிரப்பி வாட்டர் பாம்பராக மாற்றிக்கொள்வதன் மூலம் காட்டுத்தீ போன்றவற்றை அணைக்க பயன்படுத்தலாம். இதனை நடுவானின் எரிபொருள் நிரப்பவும் பயன்படுத்தலாம். தேவைப்படும் போது எமர்ஜென்ஸி மருத்துவமனையாக மாற்றிக்கொள்ளலாம். விஐபி விமானங்கள் தரை இறங்க முடியாத பகுதிகளில் இவற்றை விஐபி பயணங்களுக்காக பயன்படுத்தலாம்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்