நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கண்ணுக்கு கீழ் வரும் அசிங்கமான கருவளையத்தை போக்க வேண்டுமா?

பொதுவாக கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது.

முன்பு 40 வயதை கடந்த பெண்களுக்கு தான் இவை அதிகமாக இருந்தது. தற்போது ஆண்களுக்கும் கண்களுக்கு கீழ் கருவளையம் தோன்றுவது அதிகரித்துவருகிறது.

பருவ வயதை அடையும் பெண்களுக்கும் முன்கூட்டியே இந்த பிரச்சனை அதிகரித்துவருகிறது. தூக்கமின்மை, அதிகம் தொலைபேசி பாவனை போன்றவை கருவளையங்களை அதிகரிக்க காரணமாக அமைகின்றது. 

இவற்றை ஆரம்பத்திலே போக்க ஒரு இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.
பன்னீரில் பஞ்சை நனைத்து வாரத்தில் இரண்டு முறை தடவி வந்தால் போதும்.

டீ பேக்கை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து குளிர வைத்து இரவில் கண்களில் கீழ் வைத்து தூங்க வேண்டும். இது விரிவடைந்த இரத்தக் குழாய்களைக் கட்டுப்படுத்தி கருவளையங்களை குணப்படுத்தும்.

சிறிதளவு குங்குமப்பூவை ஒரு டீ ஸ்பூன்காய்ச்சாத பாலில் ஊற வைத்து விரல்களால் தொட்டு கருவளையம் இருக்கும் இடத்தில் தடவவும். இரவு நேரங்களில் தடவி காலையில் கழுவ வேண்டும்.

சிறிது எலுமிச்சைச் சாறை தண்ணீரில் நீர்த்து, தக்காளிச் சாரையும் கலந்து பஞ்சில் தொட்டு கண்களில் தடவ வேண்டும்.

கற்றாழை ஜெல்லை கண்களில் மென்மையாக தடவலாம்.

தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு பாதாம் எண்ணெயை கண்களில் தடவலாம்.

தினமும் ஒருமுறை ஆரஞ்சு சாற்றில் பஞ்சில் நனைத்து அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினாலும் கண்கள் பளிச்சிடும்.

ஆலிவ் ஆயில் கொண்டு கண்களுக்கு கீழ் மென்மையாக மசாஜ் செய்து இரவு முழுவதும் விட வேண்டும்.  

ஃகாபி பொடியை ஒரு டீ ஸ்பூன் தேனில் கலந்து குழைத்து கண்களுக்கு கீழ் கண்களில் படாமல் தடவுங்கள், குறிப்பாக கருவளையம் உள்ள இடங்களில் தடவுங்கள். இதை இரவு முழுவதும் உலர விட்டு கழுவ வேண்டும். சருமத்தில் எரிச்சல் இருந்தால் அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.  

8-10 புதினா இலையை அரைத்து மசித்து அதன் சாற்றை கருவளையம் ஏற்பட்ட இடத்தில் தடவ வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

உருளைக்கிழங்கை மசித்து அதன் சாற்றை எடுத்து அதில் பஞ்சை நனைத்து தடவி 10 அல்லது 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். சிறிதளவு புதினா இலையை கசக்கி அதன் சாற்றுடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்டாக குழைத்து கண்களில் தடவலாம்.

வெள்ளரிக்காய் வட்ட வடிவில் நறுக்கி, தினமும் கண்களில் 10-15 நிமிடங்கள் வைக்கலாம்.

தினமும் இரண்டு முறை இதை செய்யலாம். ஆரஞ்சு தோலை நன்றாக பொடி செய்து பன்னீரில் கலந்து கருவளையங்களில் தடவ வேண்டும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!