இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு பயணித்த கொடிய நச்சுப் பாம்பு
- Get link
- X
- Other Apps
கடல் கடந்து சென்ற இந்தியாவின் நச்சுப்பாம்பு, கப்பலில் இங்கிலாந்துக்கு பயணம்! மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்படுமா?
பாம்பு என்றால் படையும் நடங்கும், பாம்பு பழி வாங்காமல் விடாது என பாம்பு பற்றிய பல முதுமொழிகள் வழக்கில் இருந்தாலும், பாம்பு என்று சொல்லும் போதே அச்சம் ஏற்படுவது இயல்பானது. பாம்புகளில் பல வகைகள் இருந்தாலும், அவற்றில் சில வகைகளின் நஞ்சு வீரியமற்றவை. ஆனால், பொதுவாக பாம்பின் விஷம், உயிர்கொல்லியாக இருக்கிறது.
அதிலும் சில பாம்புகளின் ஒரு துளி விஷமே உயிருக்கு உலை வைப்பதாக மாறிவிடுகிறது. உலகின் கொடிய நச்சுப் பாம்புகள் பல உள்ளன. அவற்றில் ஒன்று, இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தானாகவே சென்றுவிட்டது.
இந்தியாவிலிருந்து, இங்கிலாந்துக்கு சென்ற ஒரு கப்பலின் கொள்கலனில் அந்த பாம்பு கடல் கடந்து சென்றுவிட்டது.
இந்தியாவில் இருந்து பாறைகளை வரவழைத்தார் ஒரு தொழிலதிபர். அவரது தொழில், கற்களை வியாபாரம் செய்வது தான். அவர் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த பாறைகளுடன் கூடுதல் இணைப்பாக உலகின் கொடிய பாம்புகளில் ஒன்றான வீரியன் வகைப் பாம்பும் இங்கிலாந்துக்கு போய்ச் சேர்ந்தது.
இறக்குமதி செய்யப்பட்ட சரக்கை பார்வையிட்டபோது, பாறைகளுக்கு மத்தியில் கொடிய, விஷமுள்ள பாம்பைக் கண்டவுடன் அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் உடனடியாக அரசாங்கத்திற்கு தகவல் கொடுத்தார்.
பாம்பு சோர்ந்து போய் இருந்தது. அது சீறவே இல்லை, பொட்டிப் பாம்பாய் அடங்காவிட்டாலும், கண்டெய்னர் பாம்பாய் அடங்கிவிட்டது! இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு பயணிக்கும் போது ஏற்பட்ட குளிரால் அது முடங்கியிருக்கலாம். பாம்பைப் பார்த்த அதிகாரிகள், கால்நடை மருத்துவர்களை வரவழைத்தனர்.
தெற்கு எசெக்ஸ் வனவிலங்கு மருத்துவமனையின் கால்நடை மருத்துவர்கள் கொள்கலனில் இருந்து பாம்பை மீட்டனர். "இந்தியாவில் இருந்து வந்த பாம்பு உயிருடன் இருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றும், அது மிகவும் அதிர்ஷ்டசாலி" என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.
"இந்த பாம்பை பெரிய அளவில் சமாளிக்க வேண்டியதில்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் பாம்பு வருத்தமாக இருக்கிறது. அதை சுதந்திரமாக விட முடியாது, அதை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பலாம்" என்று கால்நடை மருத்துவமனை கூறுகிறது.
கடும் விஷம் கொண்ட அந்த பாம்பு, தற்போது கடுமையான பாதுகாப்புடன் பூட்டிய கதவுக்குள் வைக்கப்பட்டுள்ளது. மிகவும் விஷமுள்ள இந்த வீரியன் வகைப் பாம்பு, தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கை பூர்வீகமாகக் கொண்டது, இது மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் காணப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ : குட்டியை காப்பாற்ற முதலையை வதம் செய்த யானை! - வீடியோ
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment