வெங்காயத்தின் உருவில் விபரீதம்: அமெரிக்காவில் பரவும் வினோத நோய்
- Get link
- X
- Other Apps
வெங்காயத்துடன் தொடர்புடைய சால்மோனெல்லா என்ற நோய் பரவல் காரணமாக 37 மாநிலங்களில் 650 க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்:
அமெரிக்காவில், வெங்காயத்துடன் தொடர்புடைய சால்மோனெல்லா என்ற நோய் பரவல் காரணமாக 37 மாநிலங்களில் 650 க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறைந்தது 129 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க (America) நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்தன. இதுவரை இந்த நோய் பரவலால் யாரும் இறக்கவில்லை. பெரும்பாலானோர் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய் பரவல், மெக்சிகோவின் சிவாவாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முழு சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் வெங்காயங்களிலிருந்து பரவியதாகவும், இந்த வெங்காயங்கள் புரோசோர்ஸ் இன்க் மூலம் அமெரிக்கா முழுவதும் விநியோகிக்கப்பட்டதாகவும் சிடிசி இந்த வாரம் தெரிவித்துள்ளது.
இந்த வெங்காயம் (Onion) கடைசியாக ஆகஸ்ட் இறுதியில் இறக்குமதி செய்யப்பட்டது என்று நிறுவனம் சுகாதார அதிகாரிகளிடம் கூறியது. ஆனால் வெங்காயத்தை மாதக்கணக்கில் சேமித்து வைக்கலாம் என்பதால், இன்னும் வீடுகளிலும் வணிகங்களிலும் இந்த வெங்காயம் இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவாவாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு புரோசோர்ஸ் மூலம் விநியோகிக்கப்பட்ட புதிய சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் வெங்காயத்தை வாங்கவோ அல்லது உட்கொள்ளவோ வேண்டாம் என வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஸ்டிக்கர் அல்லது பேக்கேஜிங் இல்லாத முழு சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் வெங்காயத்தை வெளியே எறியவும் அறிவுறுத்தப்படுகிறது.
நோய் அறிகுறிகள்
சால்மோனெல்லா தொற்று என்பது பாக்டீரியாவின் சால்மோனெல்லா குழுவால் ஏற்படும் பாக்டீரியா நோயாகும். இது பொதுவாக இரைப்பை நோய்களை ஏற்படுத்துகிறது. இந்த பாக்டீரியாவால் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் (Fever https://zeenews.india.com/tamil/health/people-beware-corona-continues-to...) மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. அதன் அறிகுறிகள் பாதிக்கப்பட்டு 6 மணிநேரத்திலிருந்து 6 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் தோன்றும்.
ALSO READ : இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு பயணித்த கொடிய நச்சுப் பாம்பு
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment