உடலில் மடிப்புகள் அதிகம் உள்ள இடங்கள் அனைத்துமே கருமையாக இருக்கும். அப்படி கருப்பாக இருக்கும் ஒரு இடம் தான் அக்குள். வியர்வை அதிகம் வெளியேறுவதாலும், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் அப்படியே தேங்கி படிந்து, ஒரு கருப்பு படலமாக உருவாகும். இது அக்குளின் அழகையே பாழாக்கி வெளிக்காட்டும்.
அக்குள் கருப்பாக உள்ளது என்று பெண்கள் தான் அதிக அளவில் வருத்தப்படுவார்கள். இதற்கு காரணம், அக்குள் கருப்பாக இருந்தால் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிய முடியாது என்பது தான்.
இதனை எளியமுறையில் போக்க ஒரு சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
ஆலிவ் எண்ணெயை சர்க்கரையுடன் கலக்கவும். அக்குள் கருமை இருக்கும் இடங்களில் ஈரப்படுத்தி இந்த கலவையை பயன்படுத்தலாம். 2 நிமிடங்கள் வட்ட இயக்கத்தில் தேய்த்து 5 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். வாரம் இரண்டு முறை இதை செய்து வரவும். கருமை படிப்படியாக நீங்கும்.
மஞ்சள் தூள், பால், தேன் மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் ஆக குழைக்கவும். இதை உள்ளங்கையில் எடுத்து அக்குள் கருமையை வியர்வையில்லாமல் சுத்தமாக கழுவி அந்த இடத்தில் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யலாம். பிறகு அதை சுத்தம் செய்யலாம். வாரம் இரண்டு முறை இதை செய்து வரலாம். இது கருமையை படிப்படியாக வெளியேற்றும்.
எலுமிச்சை சாற்றை சர்க்கரையுடன் கலக்கவும். இந்த கலவையை கைகளின் கீழ் பகுதியில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை அதிக அழுத்தமில்லாமல் வட்ட வடிவ இயக்கத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து வாரத்துக்கு 4 முறை வரை செய்யவும்.
ஆரஞ்சு பொடியை பன்னீருடன் கலந்து பேட் போல் தயாரிக்கவும். இருண்ட கைகளில் அதை தடவி 15 நிமிடங்கள் மென்மையாக தேய்க்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடவும். வாரத்துக்கு 3 முறை இதை செய்து வந்தால் கருமை நீங்கி சரும நிறமும் பளபளப்படும்.
வால்நட் பொடியை எலுமிச்சை சாற்றில் கலந்து தேன் சேர்த்து குழைக்கவும். இதை கைகளில் எடுத்து அக்குளில் தடவி வட்ட வடிவில் மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து ஈரமான கைகளால் மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு மெதுவாக சில நிமிடங்கள் தேய்க்கவும். பிறகு தண்ணீரில் கழுவி விடவும். வாரம் 3 முறை இதை செய்யவும்.
பேக்கிங்சோடாவை தேங்காயெண்ணெயுடன் கலந்து பேஸ்ட்டாக உருவாக்கவும். உங்கள் கைகளில் அதை எடுத்து சில நிமிடங்கள் அக்குள் முழுவதும் தடவவும். மென்மையாக மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவி எடுக்கவும். பேக்கிங் சோடாவுடன் ஆப்பிள் சீடர் வினிகரும் சேர்க்கலாம்.
தேனில் ஓட்ஸை கலந்து விடவும். இதை அக்குளை சுத்தம் செய்த பிறகு அக்குள் முழுவதும் தடவி வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்யவும். பிறகு 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடவும். வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால் அக்குள் கருமை நீங்கும்.
Comments
Post a Comment