நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சருமத்தை பளபளப்பாக்கும் ஆலிவ் எண்ணெய்....

ஆலிவ் எண்ணெய் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றும். பிளாக்ஹெட்ஸ், ஒயிட்ஹெட்ஸ் போன்ற சருமப் பிரச்சினைகள் நீங்கும்.
சருமத்தின் பொலிவைப் பாதுகாப்பதில் உடலில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய்ப்பசை முக்கிய பங்காற்றுகிறது. இதன் ரசாயனத் தன்மையோடு பொருந்தக்கூடியது ஆலிவ் எண்ணெய். இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கும். பிளாக்ஹெட்ஸ், ஒயிட்ஹெட்ஸ் போன்ற சருமப் பிரச்சினைகள் நீங்கும். 

ஆன்டி-ஆக்சிடண்டுகள்: 
ஆலிவ் எண்ணெயில் ஒலிக் அமிலம் மற்றும் ஸ்குவாலீன் போன்ற ஆன்டி-ஆக்சிடண்டுகள் உள்ளன. இவை சருமம் விரைவாக முதிர்ச்சி அடைவதைத் தடுக்கின்றன.

 மாய்ஸ்சுரைசர்: 
ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் இயற்கையான மாய்ஸ்சுரைசராக செயல்படுகிறது. இது சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையைப் பராமரிக்கும். சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றும். சருமம் வறண்டுபோகாமல் தடுக்கும்.

சரும பிரச்சினைகளை நீக்குதல்: 
ஆலிவ் எண்ணெய் பிளாக்ஹெட்ஸ் மற்றும் ஒயிட்ஹெட்ஸ் போன்ற சரும பிரச்சினைகளுக்கு இயற்கையான மருந்தாகும். இதை முகத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்வதன் மூலம், சருமத்துளைகள் திறந்து, மேற்கண்ட பிரச்சினைகள் எளிதில் நீங்கும். வடுக்கள் மற்றும் முகப் பருக்களால் ஏற்படும் அடையாளங்கள் மறையும். சருமம், மாசு மருவின்றி பளபளப்பாகக் காட்சி தரும். ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் வைட்டமின் ஈ, பிளேவனாய்டுகள் மற்றும் பாலிபீனால்கள் சரும செல்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் வைரஸ்கள் போன்ற கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு தோல் பிரச்சினைகளை குணமாக்குகிறது.

 அழற்சியைக் குறைத்தல்: 
ஆலிவ் எண்ணெய்யின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலின் வெளிப்புற மற்றும் உட்புற அழற்சிகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. அழகு சிகிச்சைக்காக 'எக்ஸ்ட்ரா வெர்ஜின்' ஆலிவ் எண்ணெய் எனும் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் பயன்படுத்துவதே நல்லது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!