நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

விப்ரோ, இன்போசிஸ், டாடா: ஆண்டுக்கு ரூ.80 கோடி சம்பளம் வாங்கும் தலைமை செயல் அதிகாரி!

 தொழில்நுட்ப உலகில் பல்வேறு சாதனை படைத்து வரும் இந்திய ஐடி நிறுவனங்களில் விப்ரோ நிறுவன தலைவருக்குத்தான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.


எவ்வளவு தான் ஸ்ட்ரெஸ், நீண்ட வேலை நேரம், போட்டி நிறைந்தது என்று இருந்தாலும், அதிக வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம் வழங்குவது ஐடி நிறுவனங்கள் தான். இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையில் ஐடி துறை வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கம்ப்யூட்டர் சார்ந்த பொறியியல் படிப்பு படித்தால் மட்டுமே ஐடி நிறுவனத்தில் வேலை செய்ய முடியும் என்ற நிலை மாறி, எல்லா பட்டதாரிகளுக்கும் மென்பொருள் நிறுவனங்களில் பணிக்குச் சேரலாம்.

திறமை இருக்கும் நபர்கள், இளம் வயதிலேயே லட்சக்கணக்கில் சம்பளம் பெறலாம். பல நிறுவனங்களும் போட்டிபோட்டி சம்பளம் வழங்கி வரும் நிலையில், எந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

தொழில்நுட்ப உலகில் பல்வேறு சாதனை படைத்து வரும் இந்திய ஐடி நிறுவனங்களில் விப்ரோ நிறுவன தலைவருக்குத்தான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான தியர்ரி டெலாபோர்டேவின் சம்பளம் ஆண்டுக்கு $10.51 மில்லியன் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில், இவருடைய சம்பளம் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் ஆகும். அமெரிக்க SEC ஆண்டு அறிக்கையில், இந்திய் ஐடி துறையில் அதிக சம்பளம் வாங்கும் அதிகாரியாக இந்த விவரங்கள் பதிவாகியுள்ளது.

2020-2021 நிதி ஆண்டில் ஆண்டுக்கு 8.7 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் கிட்டத்தட்ட 64 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கி இருந்தார். விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக ஜூலை, 6 2020 ஆம் ஆண்டு பதவியேற்றார். இவருக்கு 27 ஆண்டுகள் மென்பொருள் துறையில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது.

ஆச்சரியப்படும் விதமாக, விப்ரோ நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்திருக்கிறார். 1995 ஆம் ஆண்டு கேப்ஜெமினியில் சேர்ந்த டெலாபோர்டே நிறுவனத்தின் மூத்த அதிகாரியாக முன்னேறி, நிறுவனத்தில் இருந்து மே 2020 வெளியேறினார். அதற்கு பிறகு விப்ரோவில் சேர்ந்திருக்கிறார். கடந்த ஆண்டின் நான்காவது குவார்ட்டர் ஜனவரி முதல் மார்ச் 22 வரையிலான காலத்தில், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, நிறுவனத்தின் லாபம் 4% அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டின் வருமானம், 28% அதிகரித்துள்ளது.

விப்ரோவின் தலைமை செயல் அதிகாரி 10 மில்லியன் டாலர் சம்பளமாக வழங்கப்படும் அதே நேரத்தில் விப்ரோவின் சேர்மனான ரிஷாத் பிரேம்ஜிக்கு ஆண்டுக்கு 1.82 மில்லியன் டாலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறது. விப்ரோவுடன் ஒப்பிடும் பொழுது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சலீல் பரீக்கிற்கு ஆண்டுக்கு ₹71 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. இதில் நிறுவனத்தின் ஸ்டாக் ஆப்ஷன்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக ராஜேஷ் கோபிநாதன் ஆண்டுக்கு 25.8 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்