நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சியா விதை வேகமாக எடையை குறைக்க உதவுமா?

 பார்ப்பதற்கு அளவில் சிறியதாக உள்ள சியா விதைகள் நம் உடலுக்கும், மனதிற்கும் பலன் தரக் கூடிய அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள அற்புதமான விதையாகும்.  


சியா விதைகளில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், மாவுச்சத்து குறைவாக இருக்கிறது. இந்த நார்ச்சத்து என்பது கரையும் தன்மை கொண்டது. நம் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக பயன்படுகிறது. இதனால், குடல் நலன் மேம்படும். 

  குறிப்பாக இது உடல் எடையை குறைக்க உதவுகின்றது. அந்தவகையில் எடையைக் குறைப்பதற்கு இந்த சியா விதைகளை முறையாக எப்படி எடுத்துக் கொண்டால் விரைவான பலன்களைப் பெறலாம் என்பதை இங்கே பார்ப்போம்.      

சியா விதை எப்படி எடையை குறைக்க உதவுகின்றது? 


ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கின்ற உணவுகளில் ஒன்று தான் இந்த சியா விதை. இதில் அதிகப்படியான நார்ச்சத்தும் இருக்கிறது. இந்த சியா விதை உடலின் இயக்கங்களை சீராக்கி கொழுப்பைக் கரைக்கிறது. 

 சியா விதையில் உள்ள நார்ச்சத்துக்களும் பிற ஊட்டச்சத்துக்களும் அதிகப்படியான பசியைக் கட்டுப்படுத்தி. உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கின்றன. 

 அதோடு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் ஜீரண சக்தியை மேம்படுத்தவும் செய்கின்றன. இதனால் வேகமாக உடல் எடை குறைய வழிசெய்கிறது.

 ​தினமும் சியா விதைகள் எடுத்து கொள்வது என்ன ஆகும்?


  • இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் ப்ரீ-ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடுகிறது. 

  •  சியா விதைகளில் ஜீரோ கொலஸ்டிரால் உள்ளது. இது உடலின் தேவையற்ற எடையைக் குறைத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 

எப்படி எடுத்து கொள்வது நல்லது?


  • இரண்டு ஸ்பூன் அளவு சியா விதைகளை எடுத்து போதிய அளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

  •  காலையில் இது நன்றாக ஊறியிருக்கும் அதனுடன் தேவைப்பட்டால் பால் சேர்த்துக் கொள்ளலாம். இல்லாவிடில் அதனுடன் பழங்க நறுக்கி சேர்த்து புட்டிங் போல காலை உணவுக்கு பதிலாக எடுத்துக் கொள்வது நல்லது. அப்படி எடுக்கும்போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும் நார்ச்சத்துக்களையும் அதிகமாகக் கொண்டது. 

  • யோகர்ட்டுடன் சேர்த்து புட்டிங் போல சியா விதைகளை ஊற வைத்துப் பயன்படுத்தலாம்.

  • நம்முடைய ப்ரூட் சாலட்டிலும் இந்த சியா விதைகளை புட்டிங் போல ஊற வைத்து சேர்த்துக் கொள்ளலாம்.  

எடையை வேகமாக குறைக்கும் சியா விதை பானம்


தேவையானவை 

  • சியா விதைகள் - ஒரு ஸ்பூன்
  •  எலுமிச்சை பழம் - 1/2
  • தேன் - ஒரு ஸ்பூன்

செய்முறை

ஒரு கிளாஸ் அளவுக்கு வெந்நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு சியா விதைகளைச் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வரையிலும் கைவிடாமல் ஸ்பூனால் கலக்கிவிட வேண்டும்.

நன்கு கலக்கியதும் அதில் அரை எலுமிச்சை பழத்தின் சாறினைப் பிழிந்து விட்டு, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது சியா விதை பானம் ரெடி.

இந்த பானம் வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் பருகலாம். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இந்த பானத்தைக் குடிக்க வேண்டும். அதேபோன்று இந்த பானத்தைக் குடித்து அரை மணி நேரம் வரையிலும் வேறு எந்த உணவும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வரும்போது, ஆரோக்கியமான முறையில் ஒரே வாரத்தில் ஒரு கிலோ வரைக்கும் குறைக்க முடியும்.  



also read : புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல் ........

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்