அம்மாடியோவ் எவ்வளவு பெருசு... மீனவர் வலையில் சிக்கிய ராட்சத உயிரினம்! வைரல் வீடியோ
- Get link
- X
- Other Apps
மீனவர் ஒருவர் வீசிய வலையில் பிரம்மாண்ட லாப்ஸ்டர் சிக்கியுள்ள வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஜேக்கப் நோல்ஸ் என்னும் மீனவர் தான் இந்த லாப்ஸ்டரை பிடித்துள்ளார்.
இதைப்பிடித்த அவர், இதுவரை கடலில் இவ்வளவு பெரிய லாப்ஸ்டரை தான் கண்டதில்லை எனக் கூறுகிறார்.
100 ஆண்டுகள் கடலில் வசிக்கும்
மேலும், தான் பிடித்த லாப்ஸ்டரை கையில் ஏந்தியபடி ஜேக்கப் பேசும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தொடர்ந்து, இந்த லாப்ஸ்டர் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வயதுகொண்டதாக இருக்கலாம் எனக் தெரிவித்தார். இவை எனது அப்பாவோ, தாத்தாவோ அல்லது கொள்ளுத் தாத்தாவோ இதே லாப்ஸ்டரை பிடித்து மீண்டும் கடலில் விட்டிருக்கக்கூடும் என்றார்.
பின் லாப்ஸ்டரின் நகங்களில் உணவு துணுக்குகளை வைத்து, அதனை மீண்டும் தண்ணீரிலேயே விட்டுள்ளார்.
காரணம் பொதுவாக அளவில் மிகப்பெரிய லாப்ஸ்டர்கள் அவற்றின் இனப்பெருக்கத்திற்கு ஆதாரமாக திகழ்வதால் ஜேக்கப் அதனை மீண்டும் தண்ணீரில் விட்டு இருக்கிறார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment