நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அது எப்படி இந்த பொண்ணுக்கு மட்டும் 3 கால் இருக்கு... தலை சுற்ற வைத்த போட்டோ!

புகைப்படத்தில் சிவப்பு போர்வை மீது அமர்ந்திருக்கும் பெண்ணை முதலில் மேலோட்டமாக பார்க்கும் போது அவருக்கு 3 கால்கள் இருப்பது போல் தோன்றுகிறது.
கடந்த சில நாட்களாகவே இணையத்தில் தலை சுற்ற வைக்கும் பல ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ‘இருக்கு ஆனா இல்ல’, ‘மறைஞ்சியிருக்கு கண்டுபிடிங்க’, ‘ஒளிந்து கொண்டிருக்கும் உருவங்களின் எத்தனை சொல்லுங்கள்’, “இந்த போட்டோவில் எத்தனை விலங்குகள் மறைந்துள்ளது” என சுவாரஸ்யமான புதிர் விளையாட்டு பாணி ஆப்டிக்கல் இல்யூஷன்கள் ஏராளம்.

அதேபோல் போட்டோவில் நீங்கள் பார்க்கும் முதல் உருவத்தை வைத்தே உங்கள் ஆளுமை திறன், நண்பர்கள், காதல் விவகாரம், குணநலன்கள், பழக்க வழக்கம், நீங்கள் எப்படிப்பட்டவர் போன்ற பல விஷயங்களையும் கண்டறியும் முடியும். ஒருவரை பற்றி ஆராயக்கூடிய ஆப்டிக்கல் இல்யூஷன்கள் பெரும்பாலும் மனோதத்துவ நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்டு, உறுதிபடுத்தப்பட்டவையாக இருப்பது உண்டு.

இப்படி ஆளுமை பரிசோதனையாக இருந்தாலும் சரி, சுத்தலில் விட்டு தேடவைப்பதானாலும் சரி, ஆப்டிக்கல் இல்யூஷன்களுக்கு என தனி மவுசு உண்டு. நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடுவதோடு, ஒருவருடைய கண் மற்றும் மூளையின் செயல்பாடு திறன் குறித்தும் அறிந்து கொள்ள உதவுவதால் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் இணையத்தில் தனி இடம் பிடித்துள்ளன. சில சமயங்களில் நெட்டிசன்களின் மூளையை குழப்பக்கூடிய அல்லது என்னடா இது என மிரளவைக்க கூடிய ஆப்டிக்கல் இல்யூஷன்கள் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாவது உண்டு.

நாம் இப்போது பார்க்கப்போகும் ஆப்டிக்கல் இல்யூஷனும் அந்த வகையைச் சேர்ந்தது தான். ப்ரைன் டீசர் 2017ம் ஆண்டு வெளியிட்ட இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் தற்போது மீண்டும் இணையத்தை கலக்கி வருகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்தை பார்க்கும் பல நபர்களும் முதலில் ‘ஆஹா.. இந்த அதிசயத்தை பாருங்களே’ என வாயை பிளக்கின்றனர்.
ஏனென்றால் புகைப்படத்தில் சிவப்பு போர்வை மீது அமர்ந்திருக்கும் பெண்ணை முதலில் மேலோட்டமாக பார்க்கும் போது அவருக்கு 3 கால்கள் இருப்பது போல் தோன்றுகிறது. அதுவும் ஒரு கால் இரண்டு கால்களின் தொடை பகுதிக்கு நடுவே முளைத்துள்ளது போல் காட்சியளிப்பதை பார்க்க குழப்பமாக உள்ளது. ஆனால் இந்த படத்தில் மறைந்திருக்கும் உண்மையை கண்டுபிடிக்க முடியாமல் பலரும் குழம்பி வருகின்றனர்.

படத்தில் என்ன தவறு என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? இல்லையா? உன்னிப்பாக புகைப்படத்தைக் கவனியுங்கள். என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா?. அந்தப் பெண் ஒரு பழுப்பு நிற ஜாடியை வைத்திருப்பது தெளிவாகத் தெரியும். அதன் வடிவம் மற்றும் வண்ணம் அவரது கால்களிலுடன் ஒத்துப்போகிறது, அதனால் தான் மேலோட்டமாக பார்க்கும் போது அந்த பெண்ணுக்கு 3 கால்கள் இருப்பது போல் தெரிகிறது.

இதற்கு முன்னதாக சோசியல் மீடியாவில் ஆறு பெண்கள் சோபாவில் அமர்ந்திருக்கும் போட்டோ வைரலானது. அந்த ஆப்டிக்கல் இல்யூஷன் போட்டோவில், ஐந்து ஜோடி கால்கள் மட்டுமே கண்ணுக்குதெரியும், சோபாவில் நடுவில் இருக்கும் பெண்ணின் கால்கள் கண்ணுக்கு புலப்படாது. ஆனால் உண்மை என்னவெனில் நடுவில் அமர்ந்திருக்கும் பெண்ணுக்கு வலது மற்றும் இடதுபுறத்தில் அமர்ந்திருக்கும் பெண்கள் தங்களது கால்களை கொண்டு அவரது கால்களை மறைத்துள்ளது நன்றாக உற்றுப்பார்த்தால் மட்டுமே விளங்கும். இப்படி ஆச்சர்யமூட்டக்கூடிய பல ஆப்டிக்கல் இல்யூஷன்கள் இணையத்தில் வலம் வர ஆரம்பித்துள்ளன.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்