இந்த ஒரு காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் அருவியாய் கொட்டும் அற்புதங்கள்!
- Get link
- X
- Other Apps
பொதுவாக காய்கறிகள் என்றாலே உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும். அதிலும் சில காய்கறிகளில் எண்ணிலடக்காத நன்மைகள் கொட்டி கிடக்கும்.
அப்படியான காய்களில் பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு காயாக வாழைக்காய் இருக்கிறது.
இந்த வாழைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து காண்போம்.
சர்க்கரை நோய்
வாழைக்காய் மற்றும் வாழை மரம் தொடர்பான அனைத்துமே நமது உடலில் இருக்கும் ரத்த செல்களில் குளுகோஸ் அதிகம் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.
எலும்புகள் பலமாக
எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருப்பது அவசியம். வாழைக்காயில் எலும்புகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் தேவையான வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
உடல் எடை
உடல் எடை குறைக்க சரியான உணவுகள் சாப்பிடுவதை வடிக்கையாக்கி கொள்ள வேண்டும். வாழைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதினால் உடலின் தசைகளில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
ஜீரண உறுப்புகள்
வாழைக்காய் ஜீரண உறுப்புகளுக்கு மற்றும், உணவுக்குழாய்களுக்கு போஷாக்கு அளிக்கிறது. குடலில் இருக்கும் ப்ரோபயாடிக் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் இருப்பவர்கள் வாழைக்காய் சாப்பிடுவது நல்லது. வாழைக்காய் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் சத்து இருக்கிறது. இது குடல்களை சுத்தப்படுத்தி,அதன் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது.
also read : சியா விதை வேகமாக எடையை குறைக்க உதவுமா?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment