பாம்புக்கு தோல் உரித்து விடும் நபர் - இணையத்தில் பார்வையாளர்களை வியக்க வைதத அரிய காட்சி!
- Get link
- X
- Other Apps
அன்றாடம் சமூக ஊடகத்தில் ஆச்சரியமான பல வீடியோக்கள் வைரலாவது உண்டு. அதிலும் விலங்குகள் சம்பந்தட்ட வீடியோ இணையத்தில் வைரலாவது அதிகம்.
அந்த வகையில், பாம்பு தொடர்பான வீடியோகளை மக்கள் பலரும் பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். தற்போது பாம்பின் சட்டை உரிக்கும் வீடியோ ஒன்று சமூகக் ஊடகங்களில் வைரலாகிறது.
பாம்புகளின் உருவத்திற்கு ஏற்ப அவற்றின் சட்டை இருக்கும். பாம்பு சட்டை உரித்தல் Ecdysis அல்லது moulting என்று அழைக்கப்படுகிறது. பாம்பு அதன் சட்டையை உரிப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா? பாம்பின் பழைய தோல் அதன் வளர்ச்சிக்குத் தடையாக மாறும்போது பாம்பின் உடல் தனது சட்டையை அகற்றத் தொடங்கும்.
பின் தனது தோலை உரிப்பதற்கு முன் பாம்புகள் தண்ணீரில் நீந்தும் என்று கூறப்படுகிறது. சருமத்தில் இளக்கத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இந்த செயல்முறையை பாம்பு செய்யும்.
அதன்பிறகு, தனது மூக்கை ஒரு கடினமான பாறையிலோ அல்லது மரத்திலோ வைத்து பாம்பு தேய்க்கும்போது, அதன் தோல் உரியத் தொடங்கும்.
இளம் பாம்புகள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தோலை உரிக்கும் என்றால், வயதான பாம்புகள் ஆண்டுக்கு 4 முதல் 8 முறை சட்டையை உரிக்கும்.
அதிக வயதான பாம்புகள் வருடத்திற்கு ஒரு முறை தோலை உரிக்குமாம்.
ALSO READ : பிறந்து 2 வாரங்களே ஆன ஆட்டுக்குட்டி; 50 செ.மீட்டர் நீளம் கொண்ட காது - வினோத சம்பவம்....
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment