நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தொப்பையை குறைக்க வேண்டுமா? Flat tummy-க்கு மூன்றே மூன்று எளிய பயிற்சிகள்!

 தற்போது பெரும்பாலானோருக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை வயிற்றுசதை.


இப்போது ஒருவரை பார்க்கும்போது பெரும்பாலும் கவனிக்கிற விஷயமும் அதுவாகத்தான் இருக்கிறது. வயிற்றுசதை என்பது ஆரோக்கியமற்ற தன்மையை காட்டுகிறது. ஆரோக்கியமற்ற சதையை குறைத்து ஃபிட்டாக இருப்பது அவசியம். மூன்றே மூன்று எளிய பயிற்சிகள் ஃப்ளாட்டான வயிற்றுப்பகுதியை பெற உதவும்.


Planks

தரையில் குப்புறப்படுக்கவும். மேற்புற உடலை முழங்கைகளாலும், கீழ்புற உடலை பாதங்களாலும் தாங்கி நிறுத்தவும். இதேநிலையில் 30 நொடிகள் தொடர்ந்து இருக்கவும். நாளுக்கு நாள் நேரத்தை அதிகரித்து தினமும் 2 நிமிடங்கள் வரை இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.


Dead bugs

நேராக படுத்துக்கொள்ளவும். கைகளும், கால்களும் தரைக்கு செங்குத்தாக இருக்கும்படி நீட்டி உயர்த்தவும். பாதம் தரைக்கு நேராக இருக்கும்படி முழங்காலை 90 டிகிரி கோணத்தில் மடக்கவும். வலதுகையால் இடதுகாலை பிடித்து முன்பாக கொண்டுவரவும். அதேபோல் இடதுகையால் வலதுகாலை பிடித்து முன்பாக கொண்டுவரவும். இதை 20 முறை இரண்டுகால்களுக்கும் மாறிமாறி செய்யவும்.


V-ups

தரையில் நேராகப் படுக்கவும். இடுப்புப்பகுதி மட்டும் தரையில் இருக்குமாறு கைகள் மற்றும் கால்களை ஒன்றாக உயர்த்தி தொடவும். மீண்டும் பழைய நிலையை அடையவும். இதை 10 முறை செய்யவேண்டும்.

இந்த மூன்று பயிற்சிகளை தினசரி செய்தாலே சீக்கிரத்தில் வயிற்றுச்சதையை குறைத்து மெலிந்த இடையை பெறலாம். இது இடுப்புப்பகுதியை மட்டுமல்லாமல் தொடைப்பகுதியையும் குறைக்க உதவும்.



ALSO READ : தொடை மற்றும் பின்பக்க சதையை எளிய முறையில் குறைக்க‌னுமா? இந்த பயிற்சியை 20 நிமிடம் செய்தாலே போதும்....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்