நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பாரம்பரிய முறைப்படி சுண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி?

 சுண்டைக்காய் குழம்பு என்பது பச்சை சுண்டைக்காயைக் கொண்டு செய்வது ஆகும்.

இது சுண்டைக்காய் புளிக்குழம்பு என்றும் அழைக்கப்படுகிறது. 

சுண்டைக்காய் கார குழம்பு சூப்பராக இருக்கும். பச்சை சுண்டைக்காய் சின்ன வெங்காயம் வைத்து கார குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்


  1. பச்சை சுண்டைக்காய்
  2. சின்ன வெங்காயம் - தலா ஒரு கப்
  3. தேங்காய் துண்டுகள் - 2
  4. பூண்டு - 2 பல்
  5. கீறிய பச்சை மிளகாய் - 1
  6. மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
  7. குழம்பு பொடி - 2 டீஸ்பூன்
  8. புளி - நெல்லிக்காய் அளவு
  9. கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
  10. கறிவேப்பிலை - சிறிதளவு
  11. எண்ணெய் உப்பு - தேவையான அளவு

செய்முறை


முதலில் பூண்டு, வெங்காயம், தேங்காயை பொடியாக நறுக்கவும்.

சுண்டைக்காயை காம்பு நீக்கி, கழுவி, மத்தால் லேசாக நசுக்கிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கி, சுண்டைக்காயையும் போட்டு நன்றாக வதக்கவும்.

இதில் மஞ்சள்தூள், உப்பு, குழம்பு பொடி போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி மிளகாய்த்தூள் காரத்திற்கு ஏற்ப போட்டுக்கொள்ளவும்.

அதப் பின்னர் சுண்டைக்காய் நன்றாக வேகும் வரை கொதிக்க வைத்து, கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுண்டகாய் குழம்பு ரெடி.



ALSO READ : சிவப்பு அரிசியை தினமும் சாப்பிடுவது இவ்வளவு நன்மைகளை ஏற்படுத்துமா?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்