ஜிமெயில், பேஸ்புக் பாஸ்வேர்டு மறந்துடுச்சா? கூகுள் குரோமில் கண்டுபிடிக்க ஈஸி வழி........
- Get link
- X
- Other Apps
கூகுள் குரோம் மூலமாக சில வினாடியில் மறந்த பாஸ்வேர்டு கண்டுபிடிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து விரிவாக இங்கே காணலாம்.
பொதுவாக கணக்கை மீட்டெடுக்க forget password கொடுப்போம். அதன் செயல்முறை நீளமானது என்பதால் டைமாகும். ஆனால், கூகுள் குரோம் மூலமாக சில வினாடியில் எளிதாக பாஸ்வேர்டை கண்டுபிடிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து விரிவாக இங்கே காணலாம்.
கூகுள் குரோமில் உள்ள Autofill feature, நாம் லாகின் விவரங்களை சேமித்து வைத்து கொள்ளும். நீங்கள் முதல்முறை லாகின் செய்கையில், பாஸ்வேர்டு செவ் செய்துகொள்ளலாம் என்கிற நோட்டிபிகேஷன் திரையில் தோன்றும். நீங்கள் ஓகே சொல்லியிருந்தால் மட்டுமே, இந்த ட்ரிக் உங்களுக்கு கைகொடுக்கும்.
பாஸ்வேர்டை கண்டுபிடிக்கும் வழிமுறைகள்
- முதலில் குரோம் பரவுசரை டெஸ்க்டாப் அல்லது மொபைலில் ஓபன் செய்ய வேண்டும்.
- பின்னர், டாப்பில் வலதுபுறத்தில் உள்ள Settings ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- அங்கு, இடதுபுறம் ஓரத்தில் உள்ள Autofill ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- அதில், முதலில் இருக்கும் Passwords ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- தற்போது, கூகுள் குரோமில் ஸ்டோர் ஆகியிருக்கும் கணக்குகளின் பாஸ்வேர்ட் மறைக்கப்பட்ட நிலையில் இடம்பெற்றிருக்கும்.
- உங்களுக்கு தெரிய வேண்டிய கணக்கின் பாஸ்வேர்டை காண, password visibility ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர், அருகிலிருக்கும் மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து, ஐடி மற்றும் பாஸ்வேர்டை காப்பி செய்துகொள்ளலாம்.
குறிப்பு: நீங்கள் கூகுள் குரோமில் பாஸ்வேர்டு செவ் செய்யாவிட்டால், பார்வேர்டு மீட்டெடுக்க forget password தான் கொடுக்க வேண்டும்.
ALSO READ : ஆப்பிள் ஐபோன் குறித்து 15 ஆண்டுகள் கழித்து வெளியான ஒரு ரகசியம்! இது ஆச்சரியம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment