நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல் ........

 பச்சை பட்டாணியை தவறாமல் எடுத்துகொள்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வராது. பட்டாணியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை ஏற்படாது.

தேவையான பொருட்கள்

 பச்சை பட்டாணி - 1 கப்,

 கேரட் துருவல் - 3 டேபிள் ஸ்பூன், 

தேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,

 உப்பு - தேவைக்கு. 

தாளிக்க எண்ணெய் - 2 டீஸ்பூன்,

 கடுகு - 1 டீஸ்பூன்,

வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,

 பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,

வரமிளகாய் - 2, 

கறிவேப்பிலை - 6 இதழ்கள். 

மேலே தூவுவதற்கு அரிந்த கொத்தமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்.

 செய்முறை

 பச்சை பட்டாணியை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த பட்டாணியைச் சேர்த்து வதக்கி கேரட் துருவல், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவி கலந்துவிடவும். இப்போது சூப்பரான பட்டாணி கார சுண்டல் ரெடி.



ALSO READ : டீ, காபி ஹார்லிசுக்கு பதில் இப்படி செய்து குடித்து பாருங்கள். உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த குறையும் இருக்காது....



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்