50 வயசுலயும் உடம்பை ஃபிட்டா வைத்து கொள்ளனுமா? இந்த 5 பயிற்சியை மறக்காமல் செய்தாலே போதும்
- Get link
- X
- Other Apps
உடம்பை ஃபிட்டா வைத்து கொள்ள ஒரு சில உடற்பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றது.
அந்தவகையில் 50 வயதிலும் உடம்பை ஃபிட்டா வைத்து கொள்ள உதவும் 5 உடற்பயிற்சிகளை தற்போது பார்ப்போம்.
கர்ஸ்டு லாஞ்ச்
முதலில் நேராக நில்லுங்கள். உங்கள் கைகள் இரண்டும் இடுப்பில் இருக்க வேண்டும்.
இப்பொழுது உங்களுடைய இடது காலினை வலது பக்கமாகவும் வலது காலை இடது பக்கத்தின் பின் பக்கமாகவும் வைக்க வேண்டும் உதாரணத்திற்கு நீங்கள் படத்தினை பார்க்கலாம்.
இடது பக்கமும் வலது பக்கமும் நேராக உங்கள் தொடை இருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இப்பொழுது உங்களுடைய இடது காலினை நன்றாக முன் நோக்கி அழுத்தவும். நன்றாக மூச்சை இழுத்து விடவும் நார்மலான பொசிஷனுக்கு வந்து விடவும் இப்பொழுது கால்களை மாற்றி இதேபோல செய்யவும்.
லெக்ஸ் இன் அண்ட் அவுட்
உங்கள் கால்களை தரையில் உறுதியாக படுமாறு முழங்கால்களை மடித்து வைக்கவும். உங்கள் கைகள் இடுப்பில் இருக்க வேண்டும்.
உங்கள் முழு உடல் எடையினையும் உங்கள் பின்புறமும் கைகளிலும் இருக்க வேண்டும். ஸ்டப்ஸ் 3: இப்பொழுது உங்கள் கால்களை உங்கள் மார்பை நோக்கி நீட்டவும். இதே போல் 10 முறை செய்யவும்.
ஃப்ளட்டர் கிக்ஸ்
நேராக படுக்கவும், பின் சிறிது எழுந்து உங்கள் கைகள் பிட்டத்தின் அருகில் இருக்குமாறும் உங்கள் முதுகு சிறிது எழுந்தும் இருக்க வேண்டும்.
இடுப்பின் உயரத்தைத் தாண்டும் அளவிற்கு உங்கள் இடது காலை தரையிலிருந்து தூக்குங்கள்.
அதே நேரத்தில், வலது காலையும் உயர்த்தவும், அது தரையிலிருந்து சில இன்ச்கள் மட்டுமே மேலே உயர்ந்து இருக்க வேண்டும்.
இந்த நிலையிலே சில விநாடிகள் இருங்கள். பின்னர் கால்களினை மாற்றி செய்யுங்கள்.
சைட் பிளாங்க் வித் லெஃப்ட் லிஃப்ட்
இடது பக்கமாக படுத்துக் கொள்ளுங்கள், இப்பொழுது உங்கள் இடது முன்கை மற்றும் காலில் உங்கள் மொத்த உடல் எடையும் தாங்கும் அளவிற்கு எழுந்து நிற்க வேண்டும்.
அதற்கு இடுப்பை மேலே நோக்கி தூக்குங்கள். உங்கள் உடல் நேராக இருக்கும் பொழுது உங்கள் முழங்காலை வளைக்காமல் உங்கள் வலது காலை மேலே நோக்கி உயர்த்தவும்.
உங்கள் வலது காலை மேலே தூக்கி (1 அடி) பிறகு அதை மீண்டும் காலினை கீழே வைக்கவும்.
வைடு ஸ்குவாட்ஸ்
நேராக நிற்கவும் உங்கள் கால்களை சற்று அதிகமாக விலக்கி கொள்ளவும்.
உங்கள் முழங்கால்களை லேசாக வளைத்து, உங்கள் இடுப்பை பின்னால் தள்ளுங்கள். உங்கள் முதுகெலும்பு மற்றும் மார்பு நார்மலாக இருக்க வேண்டும்.
உங்கள் தொடைகள் தரையினை நோக்கி நேராக இருக்க வேண்டும்.
ALSO READ : முகப்பரு மற்றும் சரும பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு வேண்டுமா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தி பாருங்க
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment