தெர்மல் கேமராவில் பிடிப்பட்ட பிரமாண்டமான 'மனித குரங்கு' - வெளிச்சத்துக்கு வரும் மர்மம்.........
- Get link
- X
- Other Apps
வெப்பநிலையை அறிவதன் மூலம் உயிரினங்களை அசைவுகளைக் கவனிக்கப் பயன்படும் தெர்மல் கேமரா ஒன்றில் பெரிய குரங்கு மனிதனினை பார்த்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கிங் காங் படத்தில் வருவது போன்ற பெரிய அளவிலான மனிதக் குரங்குகள் இப்போதும் இருப்பதாகவும் அவை காடுகளை ஆட்சி செய்வதாகவும் இப்போதும் நம்பப்படுகிறது. இவை ஆங்கிலத்தில் Bigfoot என அழைக்கப்படுகின்றன. இந்த உயிரினங்களைப் பற்றிப் பல மர்மக் கதைகளும், நம்பிக்கைகளும் இருக்கிறது.
ஆனால் தற்போது வெப்பநிலையை அறிவதன் மூலம் உயிரினங்களை அசைவுகளைக் கவனிக்கப் பயன்படும் தெர்மல் கேமரா ஒன்றில் பெரிய குரங்கு மனிதனினை பார்த்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ட்ராவல் சேனல் எனும் தொலைக்காட்சிக்காக ஆவணப்படம் எடுக்கச் சென்ற ஆராய்ச்சியாளர்கள், “பிரமாண்டமான உருவம் கொண்ட ’குரங்கு மனிதன்’ மரத்தின் பின் நின்று தங்களைப் பார்த்தாக” கூறுகின்றனர்.
தெர்மல் கேமராவில் இது வீடியோ பதிவு செய்யப்பட்டது. பொதுவாக எட்டி அல்லது கிங்காங் போன்று இருக்கும் இந்த பெரிய உயிரினத்தைப் போல உடை மற்றும் முகமூடி அணிந்து போலி வீடியோக்களை தயாரித்துப் பரவச் செய்வர். ஆனால் இந்த புகைப்படம் அப்படிப்பட்டது அல்ல எனப் பலரும் நம்புகின்றனர்.
ட்ராவல் செனலில் Expedition Bigfoot எனும் நிகழ்ச்சிக்காக இந்த வீடியோ எடுக்கப்பட்டு வருகிறது. இது அமெரிக்க எட்டியைத் தேடிச் செல்லும் பயணத்தின் அடிப்படையிலான நிகழ்ச்சியாகும்.
இந்த ஆராய்ச்சிக்குழுவை டாக்டர் மெரியா மேயர் என்பவர் வழிநடத்துகிறார். இவர் முதன்முதலாக மடகாஸ்கரில் வாழும் லெமுர் இனத்தைக் கண்டறிந்தார். மானுடவியலாளரும், வன உயிரியல் நிருபருமான இவர் லெமுர் குறித்துப் பல கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். ஒரு வேளை இந்த ஆய்வின் முடிவில் மர்மமாகவே இருக்கும் பெரிய குரங்கு மனிதனை இவர் வெளிச்சத்துக்குக் கொண்டுவரலாம்!
ALSO READ : ஒரு விரலில் 129.5 கிலோ எடையை தூக்கிய நபர் - 10 ஆண்டுகால உலக சாதனை முறியடிப்பு
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment