நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? இதனை எப்படி போக்கலாம்?

 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் கடினமானது


எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்கள் கோடைக்காலத்தில் தான் அதிகளவு பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

முகத்தில் எண்ணெய் அதிகம் சுரப்பதால், முகம் கருமையாகவும் காட்சியளிக்க ஆரம்பிக்கும்.

ஆகவே, எண்ணெய் பசை உள்ள சருமம் உள்ளவர்கள் நிச்சயமாக சரும பராமரிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில் தற்போது எண்ணெய் சருமத்தை நீக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.  


  

  • தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை போகும்.

  • ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி, அதை நன்கு அரைத்து முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

  • எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கிவிடும்.

  • பப்பாளியை நன்கு குழைத்து முகத்தில் படும்படி தேய்க்கவும். இவை அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும்.

  • முட்டையின் மஞ்சள் கருவில் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து முகத்தில் நேரடியாக தடவி 2 மணிநேரம் ஊற வைத்து பின் நீரால் கழுவ வேண்டும்.

  •  1/2 கப் தயிருடன், 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து முகம், கழுத்தில் தடவி நன்கு காய வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்