நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆண்களே...அக்குள் ரொம்ப கருப்பா அசிங்கமா இருக்கா? செலவே இல்லாம இந்த ஒரு பொருளை போடுங்க!

 கருப்பான அக்குள் பகுதி எந்த நேரத்திலும் நமக்கு சங்கடமான உணர்வை ஏற்படுத்தலாம்.

பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் அக்குள் பகுதி கருப்பாக இருக்கும்.

கருமையான அக்குள்களை வீட்டிலேயே எளிதாக ஒளிரச் செய்யலாம். அக்குள் கருமையை போக்குவது எப்படி என்று பார்க்கலாம்.


சமையல் சோடா


 பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கினால் போதும்.  இந்த பேஸ்ட்டை வாரத்திற்கு இரண்டு முறை உங்கள் அக்குள் பகுதியில் ஸ்க்ரப் செய்யவும்.

நீங்கள் ஸ்க்ரப்பிங் செய்து முடித்த பிறகு, கலவையை தண்ணீரில் கழுவி, அந்த பகுதியை உலர வைக்கவும்.


தேங்காய் எண்ணெய்


தினமும் தேங்காய் எண்ணெயைக் கொண்டு உங்கள் அக்குள்களை மசாஜ் செய்து பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பின்னர், சாதாரண நீரில் கழுவுங்கள்.



ஆலிவ் எண்ணெய்


ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை ஒரு டேபிள் ஸ்பூன் பிரவுன் சர்க்கரையுடன் கலந்து முயற்சிக்கவும்.

உங்களுக்காக உங்கள் வீட்டிலேயே எக்ஸ்ஃபோலியேட்டர் தயாராக உள்ளது.

இரண்டு நிமிடம் ஸ்க்ரப் செய்து சில நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பின்னர், அதை சாதாரண நீரில் கழுவவும்.


எலுமிச்சை


எலுமிச்சை ஒரு இயற்கையான ப்ளீச்சிங் முகவராகக் கருதப்படுகிறது. தினமும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு உங்கள் அக்குள் பகுதியில் அரை எலுமிச்சையை தேய்த்து குளித்தால், குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை நீங்களே காண்பீர்கள்.


ALSO READ : 

முகப்பொலிவை கூட்டும் சந்தனம்! இந்த பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தி பாருங்க.......

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்