எலும்பை வலுவாக்கும் உளுந்தங்களி ரெசிபி.. எப்படி செய்றதுனு பாருங்க!
- Get link
- X
- Other Apps
ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த உளுந்தங்களி எப்படி செய்வது என்பதை பாருங்கள்!
உளுந்தில் நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது வளர் இளம் பெண்களுக்கு ஏற்ற உணவாகும். இதை களி செய்து உண்பதால் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்.
இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, பெண்களின் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது.
ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த உளுந்தங்களி எப்படி செய்வது என்பதை பாருங்கள்!
தேவையானவை
உளுந்து – அரை கிலோ
பச்சரிசி – 150 கிராம்
கருப்பட்டி – முக்கால் கிலோ
நல்லெண்ணெய் – 100 மில்லி
செய்முறை
உளுந்தை நன்கு வறுத்து, அதனுடன் பச்சரிசிச் சேர்த்து மாவாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
கருப்பட்டியை பாகு காய்ச்சி வடிகட்ட வேண்டும்.
காய்ச்சிய கருப்பட்டி பாகுவில், மாவை சிறிது, சிறிதாக சேர்த்து கிளற வேண்டும்.
பின் நல்லெண்ணைய் ஊற்றி சிறிது நேரம் வேகவிட்டு கிளறி இறக்கவும்.
சுவையான உளுந்தங்களி ரெடி!
ALSO READ : Fitness Tips: தொப்பையை குறைக்க 5 கோல்டன் ரூல்ஸ்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment