நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தினமும் ஒரு கப் தயிர் சாதம் சாப்பிடுங்க! பல அற்புத நன்மைகள் உங்களை வந்து சேரும்

 பொதுவாக தயிர் சாதம் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.

இதில் தயிர் சாதத்தில் புரோட்டீன், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகளவில் உள்ளது என்பது பலருக்கும் தெரியாது.

இந்த சத்துக்கள் அனைத்துமே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதவை.

குறிப்பாக தயிரை சாதத்தை பலரும் தங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் சேர்த்து கொள்ளுவார்கள். ஏனெனில் இது உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரியும். இப்போது தயிர் சாதத்தை தினமும் உணவில் சேர்ப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.  

அந்தவகையில் தயிர் சாதத்தை தினமும் உணவில் சேர்ப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.



  • தயிர் சாதத்தில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இது செரிமானத்திற்கு உதவுகிறது. அதுவும் தயிர் சாதத்தை உட்கொள்வது வயிறு மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளித்து, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க உதவி புரியும்.     

  •  தயிர் சாதத்தில் புரோபயோடிக்குகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகளவில் உள்ளன. இவை அனைத்தும் மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க உதவுகின்றன.

  •  ஒரு கப் தயிர் சாதமானது ஒரு நாளைக்கு வேண்டிய ஆற்றலை வழங்கக்கூடும். தயிரில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது செரிமான நொதிகளால் உடைக்கப்பட்டு உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.

  • தயிர் சாதம் செரிமானத்தை எளிதாக்குவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை வழங்குவதால், இது சருமத்தில் நேரடியாக ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே தான் தயிர் சாதம் சாப்பிடுவோரின் சருமம் சுத்தமாகவும், பொலிவோடும் இருக்கிறது. 

  • தயிர் சாதத்தை உப்பு சேர்க்காமலேயே சாப்பிடலாம். ஆகவே இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இந்த சாதம் மிகவும் நல்லது. அதுவும் தயிர் சாதத்தை தினமும் உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்