பேல் பூரிக்கு சர்வதேச அங்கீகாரமா? - வைரல் ட்வீட்டின் காரசார பின்னணி!
- Get link
- X
- Other Apps
இந்தியாவில் வட இந்தியாவை தாண்டி அனைத்து மாநில மக்களாலும் விரும்பி சாப்பிடக் கூடிய சாட் வகைகளில் ஒன்று பேல் பூரி. அப்படிப்பட்ட பேல் பூரிக்கு சர்வதேச தரத்தில் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று கூறினால் நம்ப முடிகிறதா?
உலக பிரபலமான சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப்ட் ஆஸ்திரேலியா ஷோவின் சமீபத்து எபிசோடில் 10 நிமிடத்திற்குள் ஒரு டிஷ்ஷை செய்து முடிக்கும் வகையில் போட்டியாளர்களுக்கு பிரஷர் சேலஞ்ச் செக்மெண்டில் அறிவிக்கப்பட்டது.
அதில் சாரா என்ற போட்டியாளர் இந்தியாவின் பிரபலமான நொறுக்குத்தீனிகளில் ஒன்றான கலர்ஃபுல் பேல் பூரியை தயாரித்திருந்தார்.
அதனைக் கண்ட நடுவர்கள் சாராவை பாராட்டி தள்ளியதோடு இவ்வளது ருசியான டிஷ்ஷை எப்படி பத்தே நிமிடத்தில் தயாரித்தீர்கள் என கேட்டு புகழ்ந்தும் தள்ளியிருக்கிறார்கள்.
அது தொடர்பான பதிவுகள் ட்விட்டரில் பெருமளவில் வைரலாகி வருகிறது. அதில், Pratyasha Rath என்ற பயனர் ஒருவர் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் பேல் பூரியை போட்டியாளர் தயாரித்தது பற்றியும் அதனை நடுவர்கள் பாராட்டி தள்ளியது பற்றியும் நக்கலடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து பேல் பூரி பற்றிய அந்த ட்வீட்டிற்கு பலரும் கேலியாகவும் , சிலர் இந்தியாவில் பிரபலமான சாட் வகைக்கு சர்வதேச நிகழ்ச்சியில் தயாரிக்கப்பட்டு பாராட்டப் பட்டிருப்பது நல்ல விஷயம்தான் எனவும் பதிவிட்டு வருகிறார்கள்.
ALSO READ : விப்ரோ, இன்போசிஸ், டாடா: ஆண்டுக்கு ரூ.80 கோடி சம்பளம் வாங்கும் தலைமை செயல் அதிகாரி!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment