நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டெலிட் செய்த மெசேஜை மீண்டும் பார்க்க முடியும்… வாட்ஸ்அப் அசத்தல் அப்டேட்.......

 வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த மெசேஜ்களை மீட்டெடுக்க ‘Undo’ பட்டன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் உள்ள டெலிட் மெசேஜ் ஆப்ஷன் பயனர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஆனால், பயனர்கள் ‘Delete for everyone’ஆப்ஷன் கிளிக் செய்வதற்கு பதிலாக ‘Delete for me’ கொடுத்துவிட்டால், அதனை மீட்டெடுக்க முடியாது. இதனால், முக்கியமான மெசேஜ் அல்லது போட்டோவை பயனர்கள் மிஸ் செய்ய நேர்ந்தது.

இந்த புகாரை நீண்டு நாள்களாக ஆராய்ந்து வந்த வாட்ஸ்அப், அதற்கான தீர்வை கொண்டு வந்துள்ளது. தவறுதலாக டெலிட் செய்யப்பட்ட மெசேஜை உடனடியாக மீட்டெடுக்க undo பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது.


மெசேஜை டெலிட் செய்ததும், undo பட்டன் ஸ்கீரினின் கீழ் பகுதியில் தோன்றக்கூடும். குறிப்பிட்ட நேரம் மட்டுமே பட்டன் திரையில் தோன்றும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதற்குள் கிளிக் செய்து, டெலிட் செய்த மெசேஜை ஸ்டோர் செய்திட வேண்டும்.

அந்த ஸ்கீரின்ஷாட்டையும் WABetaInfo பகிர்ந்துள்ளது. அதனை கீழே காணலாம்.


இந்த வசதி, ஜிமெயில் undo பட்டன் போலவே செயல்படுகிறது. ஏற்கனவே, வாட்ஸ்அப் போட்டி நிறுவனமான டெலிகிராமில் undo பட்டன் வசதி உள்ளது

இதுதவிர, வாட்ஸ்அப் 2 ஜிபி பைல்ஸ் அனுப்பும் வசதியை, பல பயனர்களுக்கு வழங்கியுள்ளது. பல மாதங்களாக சோதனையில் இருந்த இந்த அப்டேட், வாட்ஸ்அப் பீட்டா 2.22.13.6 வெர்ஷனில் உலகம் முழுவதும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.



ALSO READ : ஜிமெயில், பேஸ்புக் பாஸ்வேர்டு மறந்துடுச்சா? கூகுள் குரோமில் கண்டுபிடிக்க ஈஸி வழி........

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்