நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மன ஆரோக்கியத்திற்கும் உடல் பருமனுக்கும் இடையே தொடர்பு உள்ளதா..!

 உடல் பருமன் என்பது இதய பிரச்சனைகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனைகள் மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். அதே நேரத்தில் உடல் பருமன் மற்றும் மனநல பிரச்சனைகள் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கின்றன .


உடல் பருமன் என்பது அதிகப்படியான கொழுப்பை உள்ளடக்கிய ஒரு சிக்கலான நோயாக கருதப்படுகிறது. ஒருவரின் உடல் நலனை மட்டுமல்ல மன நலனையும் கூட உடல் பருமன் பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா.?

ஏனென்றால் உடல் பருமன் மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்கு இடையே நீண்ட கால தொடர்பு உள்ளது. அதிக எடையுடன் இருப்பது ஒருவருக்கு எண்ணற்ற உடல்நல குறைபாடுகள் வர காரணமாக இருக்கின்றன. உடல் பருமன் கொண்டவர்களில் கிட்டத்தட்ட சுமார் 70-80% பேருக்கு மனம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். உடல் பருமனுக்கும் மன ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பை இங்கே டிகோட் செய்கிறோம்.

அதிக எடையுடன் இருக்கும் ஒருவருக்கு உடல்பருமன் எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்தும். மனநல கோளாறுகள் மற்றும் மனநல நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பல மருந்துகளுடன் உடல் பருமன் தொடர்புடையது என்பதற்கான சான்றுகள் உள்ளன. மனச்சோர்வு மற்றும் உடல் பருமன் ஆகிய இரண்டிற்கும் மன அழுத்தம் ஒரு காரணியாகும்.உடலில் வலி மற்றும் அழற்சியை உடல் பருமன் அதிகரிக்கிறது. இதுவும் மன அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது.

மிக அதிக உடல் எடையுடன் இருக்கும் சிலர் தனிமையான உணர்வு, சுயமரியாதை இல்லாதது போல உணர்வு, மற்றும் விரக்தி உள்ளிட்டவற்றுக்கு ஆளாகுகின்றனர். உடல் பருமனாக இருப்பதால் ஏளனத்திற்கு உள்ளாகும் பலர் இயல்பாகவே மனதளவில் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். உடல் பருமனாக இருப்பவர்கள் தங்கள் தோற்றத்தில் திருப்தியடையாமல், எப்படி இருக்கிறோம் என பிறர் தங்களை மதிப்பிட்டு கொண்டே இருக்கிறார்களே என்ற கவலையை அனுபவிக்கின்றனர்.

அதிக எடையுடன் இருக்கும் ஒருவர் விரக்தியாக, கோபம் மற்றும் வருத்தமாக இருக்கலாம். கடினமான உணர்ச்சிகளை பற்றி அறிந்திருப்பது அவற்றைக் கையாள்வதற்கான முதல் படியாகும். உணர்ச்சிகளை அடையாளம் காண பயிற்சி தேவை. பல ஆய்வுகள் உடல் பருமன் மற்றும் மனச்சோர்வு, உணவுக் கோளாறுகள், பதட்டம் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு மனநலப் பிரச்சினைகளுக்கு இடையே நேர்மறையான தொடர்பை நிரூபித்துள்ளன. தனிநபர்களின் வாழ்க்கைத் தரத்தை உடல் பருமன் பெரிதும் பாதிக்கிறது.

அதிக எடை அல்லது உடல் பருமனாக இருக்கும் ஒருவருக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை நடைமுறைகளை கடைப்பிடிப்பதில் , மனநல சவால்கள் ஒரு தடையாக இருக்கலாம். எனினும் நல்ல செய்தி என்னவெனில் மிதமான எடை இழப்பு கூட உடல் பருமனுடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகளை மேம்படுத்தலாம் அல்லது தடுக்கலாம். ஒருவரின் பிஎம்ஐ நிலை குறைவாக இருந்தால், உணவு மாற்றங்கள், நல்ல இரவு தூக்கம், அதிகரித்த உடல் செயல்பாடு மற்றும் பழக்க வழக்க மாற்றங்கள் எடை இழப்புக்கு உதவும்.

ஆனால், பிஎம்ஐ 30-க்கு மேல் இருந்து உடல் பருமனால் மனநல பாதிப்புகளும் இருந்தால், ஆலோசனையுடன் கூடிய பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு சிறந்த முடிவுகளை அளிக்கும். தவிர யோகா மற்றும் தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் பெரும் உதவியாக இருக்கும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!