நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வயிற்றில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் கரைய இந்த சுவையான தோசை மட்டும் போதும்........

 இன்றைய கட்டுப்பாடு இல்லாத உணவு முறையின் காரணமாக சிறு வயதிலேயே ஆண்கள் முதல் பெண்கள் வரை பலரும் அதிகப்படியான உடல் எடையுடன், பார்ப்பதற்கு அசிங்கமாக காணப்படுகிறார்கள்.


எனவே நாட்கள் செல்ல செல்ல இவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இப்படி உடல் எடையை குறைக்காமல் அப்படியே விட்டுவிட்டால் சர்க்கரை வியாதி முதல் உடலில் பலவிதமான நோய்கள் வர ஆரம்பித்து விடுகின்றன. இவ்வாறு உடல் நோய் தொற்றுக்கு உள்ளாக முதல் காரணமாக இந்த உடல் எடையும் அமைகிறது. எனவே உடல் எடையை சரியான அளவில் பராமரித்து கொள்ள வேண்டும். இவ்வாறு உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைப்பதற்கு இந்த பயத்த மாவு தோசை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாருங்கள் இந்த பயத்தமாவு தோசையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


தேவையான பொருட்கள்:

 பயத்தம் மாவு – 100 கிராம், 
அரிசி மாவு – இரண்டு ஸ்பூன்,
 ரவை – இரண்டு ஸ்பூன்,
 வெங்காயம் – ஒன்று,
 பச்சை மிளகாய் – ஒன்று,
 காய்ந்த மிளகாய் – இரண்டு, 
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்,
 உப்பு – அரை ஸ்பூன், 
இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, 
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
 கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து,
 எண்ணெய் – 3 ஸ்பூன். 

செய்முறை:

 முதலில் 100 கிராம் பயத்தம் மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் 2 ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 2 ஸ்பூன் ரவை வைத்து நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து விட வேண்டும்.


பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் 2 காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பச்சை மிளகாய் மற்றும் ஒரு வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதேபோல் சிறிய துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். 

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி இவற்றையும் கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் பொடி செய்த காய்ந்த மிளகாயையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இறுதியாக ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றை 10 நிமிடத்திற்கு நன்றாக ஊறவைத்து, அதன் பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு தோசைக்கல்லை வைத்து, தோசை கல் நன்றாக காய்ந்ததும் ஒரு கரண்டி மாவு எடுத்து தோசை ஊற்ற வேண்டும். பிறகு தசையின் மீது அரை ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். தோசை நன்றாக வெந்ததும் அதனை திருப்பி போட்டு எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான பயத்தம் மாவு தோசை தயாராகிவிட்டது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!